ராஜாக்கள் குடும்பத்தில் பூகம்பம்.

நஜீப்

நன்றி:26.07.2026 ஞாயிறு தினக்குரல் 

கோட்டாவுக்கு எதிராக அவரது சகோதரி (பிரீதி ராஜபக்ஸ) மகன் மாலகா சந்ரதாச கொழும்பு மத்திய ஊழல் மோசடிப் பிரிவில் அதிரடி வாக்குமூலம் ஒன்றைக் கொடுத்திருக்கின்றார். இது கைதாகி உள்ளே இருக்கும் சுவிஸ்வர பண்டாரவுக்கு கோட்டா இரு சம்பளம் கொடுத்தது தொடர்பான கதைக்கு மாலக கொடுத்த வாக்குமூலம்.

சுவிஸ்வர பண்டாரவுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை தான் பெற்றுக் கொண்டது பற்றி மாமனார் கோட்டா என்னை சம்பந்தப்படுத்துவது ஆதாரமே இல்லாத கதை. அதனை நான் அடியோடு நிராகரிக்கின்றேன்.

அவரிடத்தில் நான் எந்தப் பதவிகளையும் வகித்தது கிடையாது. அரசியல் செய்ததும் கிடையாது என்று அவர் இந்த மோசடிகள் தொடர்பான விசாரணையில் சில தினங்களுக்கு முன்னர் அதிகாரிகளிடத்தில் தெரிவித்திருக்கின்றார்.

சுவிஸ்வர சம்பளம் தொடர்பாக கோட்டா இதற்கு முன்னரும் முன்னுக்குப் பின் முரணாக வாக்குமூலங்களைக் கொடுத்திருந்தது தெரிந்ததே.

Previous Story

சிறைச்சாலை அதிரடி தகவல்!

Next Story

"එයා මළ නිසා මෙයා බේරුණා" JVP දකුණේ නායක ගාමිණී බාස්ගේ සැබෑ ජීවිත කතාව