நஜீப்
நன்றி:26.07.2026 ஞாயிறு தினக்குரல்
இதுவும் ஒரு சர்ச்சையான கதைதான். அஜித் பிரசன்ன நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக ஐந்து வருடங்கள் உள்ளே போனவர். அவர் ஒரு இராணுவ மேஜரும் சட்டத்தரணியும் கூட. சில தினங்களுக்கு முன் சமுதிதவுடனான நேர்காணலில் அவர் பகிரங்கமாக சொன்ன கதைகள் இவை.
சிறைச்சாலைகளில் போதை பாவனை சுதந்திரமாக நடக்கின்றது. வேடிக்கை என்னவென்றால் சிறைக்காவலர்கள் தான் அங்கு இந்த வியாபாரத்தை பண்ணிக் கொண்டிருக்கின்றார்கள். வெளியில் இருந்து போதைப் பெருட்களை எவரும் வாங்கக் கூடாது தம்மிடமே வாங்குமாறு காவலர்கள் கைதிகளைக் கட்டாயப்படுத்துகின்றார்கள்.
சிறைக் கைதிகளுக்கான உணவுப் பொருட்கள் அதிகாரிகள் வீடுகளுக்குத் தாராளமாகப் போகின்றன. கைதிகள் நிலமை படுமோசம். குடிநீருக்குக் கூட அவர்கள் போராடுகின்றார்கள்.! நான் அறிய அதில் மூவர் மரணித்தும் இருக்கின்றார்கள்.
அஜித் அந்த நிகழ்ச்சியில் பகிரங்கமாக போட்டுடைத்தார். இவர் பல்கலைக்கழகத்தில் மனித உரிமைகள் தொடர்பான பட்டப்படிப்பை பூர்த்தி செய்தவரும் கூட!





