நன்றி:
19.07.2026 ஞாயிறு தினக்குரல்
நெருங்கி வரும் ஆபத்திலிருந்து தப்பிக்க சில அரசியல்வாதிகள் முடியுமான வரை விரைவில் அரசைக் கவிழ்த்துவிட துடிக்கிறார்கள். இதில் சாமர, தயாசிரி முக்கியமானவர்கள். தம்மை உள்ளே போட்டல் நாம் அதிகாரத்துக்கு வந்ததும் இந்த ஆட்சியாளர்களை அதற்குப் பலி தீர்க்க உள்ளே தள்ளுவோம்.
இது சாமர சம்பத் அச்சுறுத்தல். எதிர்க் கட்சிகள் அவசரமாக ஓரணியில் இணையா விட்டால் நாம் வேட்டையாடப்படுவோம். வாருங்கள் புதிய கூட்டணி சமைத்து அரசை வீழ்த்த-தயாசிரி அழைப்பு!
அதே நேரம் நாம் அதிகாரத்தில் இருந்த நாட்களில் சிறிய தவறுகள் நடந்திருக்கும் என்று குற்றங்களை தயாசிரியே பகிரங்கமாக ஏற்றுக்கொள்கின்றார். ஒரு மில்லியன், ஒரு பில்லியன், ஒரு ரில்லியன், மேசாடி ஊழல். கொள்ளை, கொலைகள் என்றிருக்கின்றன.
இதில் தயா குறிப்பிடுகின்ற சிறிய தவறுகள் என்பதன் அளவு கோல் என்ன? நீதிமன்றங்கள்தானே இதனை முடிவு செய்ய வேண்டும். ஆனால் நீதி மன்றங்கள் நம்மை கண்டு கொள்ளவே கூடாது என்பது என்னவாதம்.





