குரல் தரும் குறுஞ்செய்திகள்

Dollar Background

நன்றி:

19.07.2026 ஞாயிறு தினக்குரல் 

1.சிறைச்சாலை கிளர்ச்சி பற்றி இப்படி ஒரு கருத்து நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது. உள்ளே வர  இருப்போருக்கு வசதி வாய்ப்புக்களை அதிகரித்துக் கொள்ளும் ஏற்பாடாம்.!

2.சிறுபான்மை கூட்டணிக்கு சஜிதிடம் அங்கிகாரம் பெற வேண்டியதில்லை மனோ துணிச்சலான பதில். சஜித்திடம் அனுமதி கேட்டே போனார்கள் முஜிபர் விடுகின்ற கதை.!

3.புதிய இனவாத-ஊழல் கூட்டணியை சிறுபான்மை சமூகங்கள் நிராகரிப்பதால் கூலிக்கு சில முல்லாக்களையும் வேட்டிக்களையும் பிடித்து அங்கு காட்சிக்கு வைக்கின்றார்களலாம்.!

4.இருபது வருடங்களுக்கு பின் அனுர காலத்தில் தலா வருமானம் 5000 டொலர்களை  தாண்டியதை வஞ்கமின்றி ஏற்க வேண்டும்.பண்பான அரசியல்வாதி ஹர்ஷ த சில்வா!

5.கார்தினாலையும் இராணுவத் தளபதியையும் முடிச்சுப்போட்டு சாமர சம்பத் இனவாதத்துடன் கூறிய கதை அபாந்தம். அந்த நாட்களில் கார்தினால் நாட்டிலே இருக்கவில்லையாம்.!

6.நமது எதிர்க் கட்சியைக் கொடுத்து ஒரு பிலாஸ்டிக் பேசனையேனும் பெற்றுக்கொள்ள முடியாது. ஒரு ஊடகச் சந்திப்பில் இப்படி கிண்டி இருக்கின்றார்கள் கடவுளே.!

7.ஐமச-ஐதேக இணைவதாக இருந்தால் ரணில் தள்ளி நின்று கொள்ள வேண்டும். இந்தக் கோரிக்கை சஜித் தரப்பில் எதிர்பார்க்கப்பட அது சாதகமாக ஆராயப்படுகிறதாம்.!

Previous Story

කාදිනල් ගැන බොරැ කිව්වට බඩුම තමයි

Next Story

එකාබද්ධ විපක්ෂයේ දේශපාලුවෝ හඩාවැටෙයි 😢