நஜீப்
நன்றி: 21.06.2026 ஞாயிறு தினக்குரல்
மனு நீதி கண்ட சோழன். ஒரு குழந்தை இரு தாய்மார் சொலமன், தமிழுக்கு மட்டுமல்ல பிறமொழிகளுக்கும் நல்ல வரலாற்றுக் கதைகள். அதனால்தான் சோழனும் சொலமானும் இன்றும் நமது இதயங்களில்.
ஆனால் இது நம்ம நாட்டு ராஜாக்களின் பிள்ளைப்பாசக் கதைகள். யோசித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த மகன். மகிந்த பிள்ளைகளுக்கு எண்ணிலடங்கா குற்றச்சாட்டுக்களும் வழக்குகளும்.
இது யோசித சட்டவிரோத கடற்படை அதிகாரியாக வந்து நிதி மோசடி செய்த குற்றச்சாட்டு. மகிந்த மகனுக்காக அடிப்படை தகைமைகளை மாற்றினார். தப்புத் தப்பாக வரப்பிரசாதங்களை அனுபவிக்க உதவினார் என கடற்படை அதிகாரி வசந்த கரன்னாகொடவுக்கும் சிக்கல்.
வேடிக்கை சாதாரண உயர்தரப் பரீட்சை பெறுபேருகளிலும் ஊழல். இந்த நாட்டு குடிகளுக்கு ஒரு சட்டம் ராஜாக்களுக்கு வேறு சட்டம். ராஜாக்கள் விசிரிகள் இவற்றுக்கும் சத்தியாக்கிரகம் உண்ணாவிரேதம் என்று ஏதாவது தெருவுக்கு வருவார்களோ தெரியாது.




