நஜீப்
நன்றி: 24.05.2026 ஞாயிறு தினக்குரல்
தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர் சுமந்திரன் தனது அரசியல் தேவைக்காக முன்னாள் போராளிகளைப் பாவித்து வருகின்றார். இப்படி ஒரு குற்றச்சாட்டை சுமந்திரன் மீது சுமத்தி இருக்கின்றார் யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் மாணிக்கவாசர்
இளம்பிறையான். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வில் வைத்தே அவர் தனது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார். போர்க் குற்றங்கள் காணாமலாக்கப்பட்டோர் தொடர்ப்பில் புலிகளையும் விசாரிக்க வேண்டும் என சுமந்திரன் சொல்லி வந்திருக்கின்றார்.
ஆனால் இப்போது கட்சிக்குள் முன்னாள் போராளிகளுக்கும் மாவீரர் குடும்ப உறுப்பினர்களுக்கும் முன்னுரிமை என்றும் மனிதன் பேசி வருகின்றார். இது சுமந்திரனின் பட்சோந்தித்தனம் என்பது இளம்பிறையான் கேள்வியாக இருக்கின்றது.
அதற்கு தமிழ் மக்கள்தான் பதில் கொடுக்க வேண்டும். போராளிகள் மாவீரர்கள் முதுகில் ஏறி வடக்கு முதல்வராகும் கனவை வல்லுனர் அடைய முனைகின்றாறோ என்னவோ.





