நஜீப்
நன்றி: 03.05.2026 ஞாயிறு தினக்குரல்
சில வழக்குகளை முன்னெடுத்துச் செல்கின்ற போது படைத்தரப்பினர் ஒத்துழைப்பு வழங்க பின்னடிப்பதால் அந்த வழக்குகளுக்கு முட்டுக்கட்டை வருவதாக தெரிய வருகின்றது.
இதனால் அரச நீதித்துறையினருக்கும் குறிப்பாக இராணுவ உளவுப் பிரிவு அதிகாரிகளுக்குமிடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடந்து தற்போது இணக்கப்பாடுகள் காணப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது. குறிப்பாக ஈஸ்டர் தாக்குதல் வழக்குத் தொடர்பில் பெரும் பின்னடைவு என்ற நிலை இருந்து வந்ததாகவும் தெரிய வருகின்றது.
கடந்த ஆட்சி காலத்தில் அரசியல்வாதிகளின் விருப்பங்களை நிறைவேற்றிய அதிகாரிகள் இன்னும் உயர் பதவிகளில் இருப்பதால்தான் இந்த முட்டுக்கட்டைகள் என்றும் சொல்லப்படுகின்றது.
இப்போது இரு தரப்பினருக்கமிடையில் உடன்பாடுகள் காணப்பட்டிருப்பதாக சொன்னாலும் இது எந்தளவுக்கு சாத்தியம்? இதனால்தான் அரசு புலி வாலைப்பிடித்த நிலையில்தான் இந்த வழக்குகளை நகர்த்திக் கொண்டிருக்கின்றதோ என்று நமக்கு ஒரு சந்தேகம் இதில் வருகின்றது.



