சினிமாவை மிஞ்சும் ரியல் சம்பவம்!

வடகொரியாவில் இருந்து தப்பி ஓடிய 9 பேர்! 

Planned For 10 Years, Out In 2 Hours: How Family Of 9 Escaped North Korea

வடகொரியாவில் இருந்து ஒரு குடும்பம் தப்பி சென்றுள்ள சம்பவம் அரங்கேறி இருக்கிறது. 10 ஆண்டுகளாக திட்டமிட்டு சினிமாவை மிஞ்சும் அளவிற்கு திக்திக் நிமிடங்களுடன் வடகொரியாவை விட்டு தப்பியுள்ளனர்.

கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வடகொரியாவில் சர்வாதிகார ஆட்சி நடைபெற்று வருகிறது.

அங்குள்ள மக்கள் ஒரு நகரத்தில் இருந்து இன்னொரு நகரத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் கூட அனுமதி பெற வேண்டும் நிலையே அங்கு உள்ளது.

வடகொரியாவை ஆட்சி செய்யும் கிம் ஜாங் உன் பற்றி ஏதாவது விமர்சனங்களை வைத்தாலோ.. கேள்வி எழுப்பினாலோ மூன்று தலைமுறைக்கு தண்டனை விதிக்கப்படும். வடகொரியாவில் இருந்து தப்பிய குடும்பம் நாட்டை விட்டு தப்பிக்க நினைத்து பிடிபட்டால் மரண தண்டனை நிச்சயம்.

இதனால் வடகொரியா எல்லையில் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பும் இருக்கும். இத்தகைய கடுமையான கெடுபிடிகளை தாண்டி, வடகொரியாவில் இருந்து ஒரு குடும்பத்தை சேர்ந்த 9 பேர் தப்பியுள்ளனர்.

10 ஆண்டுகளாக திட்டமிட்டு சினிமாவை மிஞ்சும் அளவிற்கு திக்திக் நிமிடங்களுடன் வடகொரியாவை விட்டு தப்பியுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:- வடகொரியாவை சேர்ந்த 9 பேர் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 6 ஆம் தேதி கடல் வழியாக நாட்டை விட்டு தப்பியுள்ளனர். ஒரு சிறிய படகு ஒன்றில் பாதுகாப்பு படை வீரர்களுக்கு தெரியாமல் மஞ்சள் கடலை அடைந்து கொரியாவில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

2 மணி நேர பயணத்திற்காக 10 வருடங்களாக திட்டமிட்டு இருக்கிறார்கள் அந்த குடும்பத்தினர். தப்பி சென்ற இரண்டு சகோதரர்களின் தந்தை முதன்முதலில் கடல் வழியாக தப்பிச் செல்லும் யோசனையை முன்வைத்துள்ளார்.

10 ஆண்டுகளாக திட்டமிட்டு ஆனால் அதை நிறைவேற்றியதை அவர் பார்க்க உயிருடன் இல்லை. தந்தை மறைந்தாலும் அவரது மகன்கள் கிம் இல்-ஹ்யோக் மற்றும் கிம் யி-ஹ்யோக் எப்படியாவது தப்ப முடிவு செய்து இருக்கிறார்கள்.

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக கிம் யி-ஹ்யோக் மீன் பிடிக்க கற்றுள்ளார். பின்னர் உள்ளூர் பாதுகாப்பு அதிகாரிகளுடன் பழக்கத்தை ஏற்படுத்தியுள்ளார். மீனவர் போல வேடமிட்டு அடிக்கடி, சர்வதேச எல்லை வரை சென்று அங்கு பாதுகாப்பு எப்படி உள்ளது..

எவ்வளவு நேரத்தில் ரோந்து படையினர் வருகிறார்கள் என்று கணக்கிட்டு வந்து இருக்கிறார்கள். 10 ஆண்டுகளாக படிப்படியாக திட்டமிட்டு சரியான நேரத்திற்கு காத்திருந்த அந்த குடும்பம், ரேடார் கண்காணிப்பு கடினமான சூழலாக இருக்கும் சவாலான வானிலைக்கான நேரத்தில் தப்பி செல்ல முடிவு செய்துள்ளது.

தென் கொரியாவிற்கு தப்பினர் தங்கள் தந்தையின் அஸ்தியுடன் மனைவி பிள்ளைகள் என 9 பேரும் சிறிய படகில் புறப்பட்டுள்ளனர். நடந்து செல்லும் வேகத்தில் படகை மெதுவாக இயக்கி சென்று இருக்கிறார்கள்.

ரேடாரில் இருந்து தப்பிப்பதற்காக இந்த யுக்தியை கையாண்ட அவர்கள், பயண நேரம் முடியும் வரை ஒரு வார்த்தை கூட பேசாமல் மயான அமைதியுடன் வந்துள்ளனர். படகு என்ஜின் சத்தத்தை விட இதயத்துடிப்பு சத்தம் அதிகமாக இருந்தது என சொல்லும் கிம் இல் ஹையேக், ஒரு வழியாக தென்கொரியாவின் யெனோபியாங் தீவை கண்ட பிறகே நிம்மதி பெருமூச்சுவிட்டுள்ளனர்.

ஒரு பெரிய போராட்டத்திற்கு பிறகு வடகொரியாவில் இருந்து எஸ்கேப் ஆகி தென்கொரியாவில் சுதந்திர காற்றை சுவாசித்து வருகிறார்களாம்.

சகோதரர்களில் ஒருவர் ஸ்கூபா டைவிங்கின் போது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துள்ளார். தற்போது கிம் இல் ஹியோக் தென்கொரியாவில் செஃப் ஆக பணியாற்றி வருகிறார்.

தன்னை ஒரு அதிர்ஷ்டக்காரன் என்றும் அவர் கூறியுள்ளார். வடகொரியாவில் இருந்து ஒரு குடும்பம் தப்பி வந்ததை சிஎன்என் ஆவணப்படமாக வெளியிட்டுள்ளது.

Previous Story

ஈரான் வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் பயணத்தில் நடந்தது என்ன?  பகிர்ந்த சீக்ரெட்!

Next Story

පැය තුනක තීරණාත්මක සාකච්ඡාවක්! සලේ මැලේසියාවට ගිය විශේෂ හේතුවක් එළියට