யார் பெற்ற பிள்ளை இது!

நஜிப்

நன்றி: 05.04.2026 ஞாயிறு தினக்குரல் 

நாம் சொல்லி இருந்தது போல ஈஸ்டர் படுகொலைகள் தொடர்பாக கம்மன்பில கண்டுபிடித்த குற்றவாளிகள் பற்றிய புத்தகம் 31.03.2026ல் வெளியாகியது.

படுகொலை தொடர்பாக சமூகம் யாரை கை நீட்டுகின்றதோ அவர்களைப் புனிதர்களாக்கி விடுவிக்கும் ஒரு சதியும், தற்போது நடந்து வரும் விசாரணைகளைத் திசை திருப்புகின்ற நோக்கமும்தான் புத்தகம்.!

நிகழ்வில் சஜித் பங்கு கொண்டு தனது இரட்டை வேடத்தை வெளிப்படுத்தி கடும் விமர்சனத்துக்கு ஆளாகிவருகின்றார். வேடிக்கை என்னவென்றால் புத்தகத்தை எழுதியது கம்மன்பில் அல்ல. மலேசியாவில் இருக்கும் பேராசிரியார் குனரத்னவாம்.

Easter Attack Mastermind Revelation Ends in Anti-Climax -

மாற்றான் பிள்ளைக்கு பிறப்புச்சான்றிதழ் கொடுத்த வேலையைத்தான் கம்மன்பில பார்த்ததாகவும் குற்றச்சாட்டு! இதன் மூலம் காசு உழைக்கும் நோக்கமுமாம்.! இந்த கம்மன்பில பணமோசடி தொடர்பில் குற்றம்சாட்டப்பட்ட ஒரு பேர்வளியும் கூட.!

பிரதான பேச்சாளராக வந்த டீ.பீ.கே.தசாநாயக்கவும் பதினொரு மாணவர்களைக் கடத்திக் கொன்றதாக நீதி விசாரணையை எதிர்நோக்கியுள்ள குற்றவாளியும் கூட.!

Previous Story

ஈரான் கொடுத்த மரண அடி அதிர்ச்சியில் அரபு நாடுகள்ஓடி ஒளிந்த இஸ்ரேல்

Next Story

Thirumavalavan போட்டியிடாததன் பின்னணி