லசந்தாவின் சுட்டித்தனங்கள்!

நஜீப்

நன்றி: 12.07.2026 ஞாயிறு தினக்குரல் 

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த சிறு பராயத்தில் பெரும் குழப்படிகாரன். ஒரு முறை தாயார் வீட்டிலிருந்து ஆளை வெளியே தள்ளி கேட்டை மூடிக்கொண்டார். ஹெரிஸ்(தந்தை)மகனை வெளியே போட்டுவிட்டார்கள் என்று பாதையில் நின்று விடாது கத்தினார்.

இது தாயாருக்கு அவமானமாகப் போக கேட்டை திறந்து ஆளை உள்ளே எடுத்துவிட்டார். கொடஹேன சென்.பெனடிக்சில் லசந்த சராசரி மாணவன்.

ஒரு முறை பரீட்சை எழுதிய விடைத்தாளை ஆசிரியர் லாலுக்குத் தெரியாது எடுத்து தனது நண்பன் அன்வர் அலி பேப்பர்களில் சரியான விடைகளை போட்டு மீண்டும் அங்கே வைக்க. திருத்தும் போது லசந்தாவுக்கும் அன்வருக்கும் அதிகூடிய புள்ளிகள்.

இதனால் பரீட்சையையே ஆசிரியர் இரத்துச் செய்து விட்டார். லசந்த நல்ல சுழல் பந்து வீச்சாளர். ஒரு ஆட்டத்தில் எட்டு விக்கட்டுக்களை எடுத்தார். ஜே.ஆர். கூட்டம் நடாத்திய இடத்துக்கே போய் அடே ஜேஆர். நாயே இறங்குடா என்று தூசனத்தில் ஏசியதும் ரகளையானது.

Previous Story

සජිත්ගෙ අලුත්ම එක ආවා

Next Story

Late Supreme Leader Khamenei's Eldest Son Leads Funeral Prayer in Mashhad Ahead of Burial | AK1N