பவரையும் காட்டிய ஈரான்-திணறிய நெதன்யாகு!

சரமாரியாக பாய்ந்த ஏவுகணைகள்!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தாக்குதலுக்கு, ரொம்பவும் ஆக்ரோஷமாக ஈரான் பதிலடி கொடுக்க தொடங்கியிருக்கிறது. குறிப்பாக, இஸ்ரேல் மீது நேற்று நடத்தப்பட்ட 66வது அலைவரிசை தாக்குதலில், ஈரான் தனது பலத்தை நிரூபித்திருக்கிறது.

இதற்கு முன்னர் வரை அனுப்பப்பட்ட ஏவுகணைகளை இஸ்ரேல் பெரிய அளவில் தடுத்து வந்திருந்தது. ஆனால், 66வது அலைவரிசை தாக்குதலை தடுக்க முடியாமல் அந்நாடு திணறியிருக்கிறது.

எங்கெல்லாம் அட்டாக்? இஸ்ரேலின் தலைநகர் டெல் அவிவ், ஜெருசலேம், ஹைபா மற்றும் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

இந்த பகுதிகள் எல்லாம், சக்தி வாய்ந்த ஏவுகணை தடுப்பு அம்சத்தின் பாதுகாப்பில் இருப்பவை. ஆனாலும் அதையெல்லம் மீறி, ஈரான் தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலில் கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது.

உச்சக்கட்டத்தில் ஈரான் சாதாரண ஏவுகணைகளை இஸ்ரேலின் வான் பாதுகாப்பு அமைப்புகள் தடுத்துவிடும். ஆனால், ஒரு ஏவுகணைக்குள் 20 முதல் 80 வரை சிறிய குண்டுகளைக் கொண்ட ‘கிளஸ்டர்’ வகை ஏவுகணைகளைத் தடுப்பது மிகவும் கடினம்.

ஏவுகணை சுடப்பட்டாலும், அதனுள் இருக்கும் சிறிய குண்டுகள் பரவலான இடங்களில் விழுந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. ஈரான் தற்போது இந்த வகை குண்டுகளை அதிக அளவில் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.

இது தவிர, காதிர் (Qadr), கோரம்ஷார் (Khorramshahr), கைபர் ஷெக்கான் (Kheibar Shekan) போன்ற நடுத்தர மற்றும் நீண்ட தூர ஏவுகணைகள் மற்றும் தற்கொலை படை ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எரிவாயு சப்ளை இந்த போர் இப்போதைக்கு நிற்கும் நிற்காது.

தாக்குதல் மேலும் நீடிக்கும் என்று ஈரான் அறிவித்திருக்கிறது. மட்டுமல்லாது அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடம் கொடுக்கும் நாடுகளும் தங்கள் எதிரிகள்தான் என்று அறிவித்திருக்கிறது.

இதுவரை வளைகுடா நாடுகளின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் எண்ணெய் வயல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு சப்ளையை பாதித்திருக்கிறது.

குறிப்பாக கத்தாரின் மிகப்பெரிய எரிவாயு வயல் மீது நடத்தப்பட்ட தாக்குதல், அடுத்த 5 ஆண்டுகளுக்கு எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதெல்லாம் அமெரிக்கா மீது மறைமுகமாக அழுத்தத்தை அதிகரித்திருக்கிறது. அமெரிக்காவிலும் எரிபொருள் விலை அதிகரித்திருக்கிறது. எனவே போரை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி டிரம்ப் பேச தொடங்கியிருக்கிறார். மறுபுறம், ஈரான் மீது தரை வழியாக போர் தொடுக்க கடற்படை வீரர்களையும் அனுப்பியிருக்கிறார்.?

Previous Story

அப்போவே வார்னிங் கொடுத்தேன்.கேட்கல-!.கத்தார் அமைச்சர்

Next Story

ஈரான் போரால் டிரம்பின் கடைசி மகனும் ஆயில் வியாபாரத்தில்