நஜீப்
நன்றி: 08.03.2026 ஞாயிறு தினக்குரல்
இந்திய-விசாக்கப்பட்டணத்தில் நடந்த ஒரு நிகழ்வில் பங்குகொண்டு நாடுதிரும்பிக் கொண்டிருந்த நேரம் அமெரிக்காவால் தாக்கப்பட்ட ஈரான் கற்படை கப்பலில் இருந்த 148 பேர் கொல்லப்பட்டு 32 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.

தாக்குதல் நமது கடற்பரப்பில் நடக்கவிலை என்று வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் குறிப்பிட்டார். அவரது இந்தக் கருத்தில் நமக்கு பெரும் சந்தேகம். தெற்கில் இலங்கைக்கு சொந்தமான கடற் பரப்பு 200 கிலோ மீற்றர்கள் வரை விரிந்து இருக்கின்றது.

அமைச்சரோ விபத்து 70 கிலோ மீற்றரில்தான் சம்பவம் நடந்திருக்கின்றது என்றார்? நாம் முதலில் விபத்துக்கு உள்ளானவர்களை மீட்பதில்தான் அக்கறை செலுத்தினோம் என்றும் சொல்லி இருந்தார்.
இது அமெரிக்கத் தாக்குதல் என்பதனை வார்த்தைகளில் கூறுவதை அமைச்சர் தவிர்த்து இருந்தார். ஆனால் அமெரிக்க நாம் தான் கப்பலைத் தாக்கி அழித்தோம் என்று கூறி இருக்கின்றது.!





