எச்சரிக்கை:அபேராம கூட்டம்!

நஜீப்

நன்றி:15.02.2026 ஞாயிறு தினக்குரல் 

மக்கள் ஆணையால் என்பிபி அதிகாரத்துக்கு வந்ததும் இதனால் இனவாதிகள் அங்கு பட்டுப்போய் பலயீனமாகி இருப்பதும் தெரிந்ததே. இந்த நேரத்தில் மீண்டும் அபேராமாவில் இனவாதிகள் அனைவரும் ஒன்று கூடுவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றது.

எனவே நிகழ்வுகளைப் பார்க்கின்ற போது பட்டுப்போன அரசியல் சக்திகள் இந்த அமர்வுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஒத்துழைக்க நிறையவே வாய்ப்புக்கள் இருக்கின்றன. பேரின முற்போக்காளர்-புத்திஜீவிகளும் சிறுபான்மை சமூக அரசியல் இயக்கங்களும் இது விவகாரத்தில் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

மேலும் 5000 வரையிலான பௌத்த தேரர்களை அரசுக்கு எதிராக ஒன்று கூட்டுகின்ற ஏற்பாடுகளை முறுத்தெட்டுவே தேரர்செய்து வருகின்றார். இந்த  நகர்வுகள் எதை நோக்கி நகர்கின்றது என்பது புரிந்து கொள்ளக் கூடியதே.

இதில் சஜித் தள்ளி நின்றாலும் அந்த அணியும் தற்போது இனவாதத்தை முன்னிருத்தி ஆட்சியை பிடிக்கின்ற ஒரு முயற்சியில் இருப்பது தெரிகின்றது.

Previous Story

වෙඩිල්ලන් ගැස්සුන හයිරිස්ක් හයි ෆොර්ප්‍රිට් නීතිඥයන්

Next Story

மலையத்தில்அனுர ஹீரோ!