நஜீப்
04.01.2026 ஞாயிறு தினக்குரல்
நாட்டின் பொலிஸ் அதிபர் வேலை பார்த்தவரே அந்த நாட்டில் பாதாள உலகுக்கும் தலைமைத்துவம் கொடுத்திருக்கின்றார் என்ற செய்தி நம்ப முடியாத ஒன்றாகத்தான் இருக்கும்.
ஆனால் நமது பொலிஸ் அதிபராக இருந்த தேசபந்து தென்னக்கோன் பாதாள மற்றும் போதை வியாபாரிகளுடன் நெருக்கமாக இருந்து வந்திருக்கின்றார். கடந்த அரகலயவின் போது மக்களின் அடிப்படை ஜனநாயக உரிமைகளை அடியாட்களை வைத்து அடித்து நொருக்கினார் என்றும் இவர் மீது குற்றசாட்டுக்கள்.
தனது பாதாள உலகத்தாரை வைத்து அவர் நடாத்திய சட்ட விரோத தாக்குதலில் பொலிஸ் அதிகாரிகளே பலியாகியும் இருக்கின்றார்கள். இப்போது போதை வியாபாரிகளுடன் நெருக்கமாக இருந்து நிறைய சொத்து சேகரித்தார் என்றும் குற்றச்சாட்டுக்கள்.
கண்டி-அம்பிட்டிய வீட்டில் பாதாள கொலையாளிகள் பலரையும் தேசபந்து மறைத்து வைத்திருந்திருந்தார் என்றெல்லாம் வலுவான குற்றிச்சாட்டுக்கள்-விசாரணைகள். இவற்றை எல்லாம் பார்க்கின்ற போது பொலிஸ் அதிபரே பாதாள சக்கரவர்த்தியாகவும் செயலாற்றி வந்திருக்கின்றார்.





