நள்ளிரவில் முடிக்கப்பட்ட மிஷன்!
டிரம்ப் சொன்ன ஷாக் தகவல்….!
கடந்த சில நாட்களாகவே வெனிசுலா மீது தாக்குதல் நடத்தப்போவதாக அமெரிக்கா அறிவித்து வந்திருந்த நிலையில், இன்று அதிகாலை வான்வழி தாக்குதலை நடத்தியிருக்கிறது. இந்த தாக்குதலையடுத்து வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் கடத்தப்பட்டிருப்பதாக டிரம்ப் கூறியிருக்கிறார்.

இதனால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது. இந்த தாக்குதலை சீனா, ரஷ்யா உள்ளிட்ட உலகின் பல நாடுகளும் கண்டித்திருக்கின்றன. கனவு கூட்டணியை கணியுங்கள்! தாக்குதல் எப்போது எப்படி நடந்தது? வெனிசுலாவை ஏற்கெனவே அமெரிக்காவின் மிகவும் சக்தி வாய்ந்த போர்க்கப்பல்கள் சுத்துப்போட்டு இருந்தன.
இந்நிலையில் இன்று அதிகாலை 2 மணியளவில் வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கிறது. தலைநகர் கராகஸில் 7 இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. இதில் லா கார்லோட்டா விமானப்படைத்தளம் தாக்கப்பட்டிருக்கிறது. இந்த விமானப்படைத்தளம் அதிபர் மாளிகைக்கு பக்கத்தில் இருக்கிறது.
இதனை தாக்கியதன் மூலம் அதிபரை தப்பிக்க விடாமல் அமெரிக்கா சுற்றி வளைத்திருக்கிறது. வெனிசுலா மீது அமெரிக்கா தாக்குதல்? நள்ளிரவில் பயங்கரம்.. பீதியில் உறைந்த மக்கள்! அதிபர் கைது? அதிபர் நிகோலஸ் மீது அமெரிக்கா தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.
குறிப்பாக போதைப்பொருள் கடத்தலுக்கு ஊக்குவிக்கிறார் என்று குற்றம்சாட்டி இருந்தது. இதனயடுத்து நள்ளிரவு நடந்த தாக்குதலில் நிகோலஸ் கைது செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார்.
வெனிசுலா அதிபர் நிகோலஸ் மற்றும் அவரது மனைவி சிறைபிடிக்கப்பட்டு, வெனிசுலாவை விட்டு வெளியேற்றப்பட்டிருக்கின்றனர். இது அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து நடத்தப்பட்ட கூட்டு நடவடிக்கை” என டிரம்ப் தனது சோஷியல் மீடியா பதிவில் தெரிவித்திருக்கிறார்.
அமெரிக்காவின் இந்த செயல், வெனிசுலாவின் தேசிய இறையாண்மை மீது நடத்தப்பட்டிருக்கும் தாக்குதல் என்று ஈரான் கண்டித்திருக்கிறது. கொலம்பிய அதிபர், இந்த விவகாரம் குறித்து பேச ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அமெரிக்கா செய்தது குற்றச் செயல் என்று கியூபா சாடியுள்ளது.
தற்போதைய நிலை என்ன? அமெரிக்காவின் தாக்குதலையடுத்து வெனிசுலாவில் அவசர நிலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. வெனிசுலாவில் உள்ள தங்கள் நாட்டை சேர்ந்தவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும் என்று அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. தலைநகரா கராகஸின் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த 36 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு நாட்டின் அதிபரை அமெரிக்கா நேரடியாக கைது செய்திருக்கிறது. கடைசியாக பனாமாவில் அந்நாட்டு அதிபர் நோரிகா 1990ல் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வெனிசுலா மீது தாக்குதல் ஏன்? அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் வெனிசுலாவில் இருந்து கரீபியன் மற்றும் கிழக்கு பசிபிக் கடல் வழியாக வருகிறது என்று, டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார்.
இந்த போதைப் பொருள் விநியோகத்தை தடுக்கவில்லை எனில், போர் தொடுக்க வேண்டி வரும் என்றும் எச்சரித்து இருந்தார். ஆனால், போதைப் பொருட்களை நாங்கள் விநியோகிக்கவில்லை என்று வெனிசுலா தொடர்ந்து மறுத்து வந்தது. தங்கள் மீது தேவையற்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டால், அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தது.
இதனால் டென்ஷனான ட்ரம்ப், வெனிசுலாவை கலந்து கடற்படையால் சுற்றி வளைத்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. வெனிசுலா நாட்டில் எண்ணை வளம் அதிகம். ஒரு லிட்டர் தண்ணீர் பாட்டிலை விட, ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை இங்கு குறைவு.
இப்படி இருக்கையில் இந்த எண்ணெய் வளங்களை முழுமையாக கைப்பற்றும் நோக்கில், தங்கள் நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக வெனிசுலா அரசியல் தலைவர்கள் விமர்சித்திருக்கிறார்கள்.





