3வது உலகப்போர்! புதினுக்கு பாடம் புகட்ட வேண்டும்- டிரம்ப்!

ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து வருகிறது. சர்வதேச போர் விதிகளின்படி, போரில் நேரடியாக பங்கேற்காதவர்கள் மீது தாக்குதல் நடத்துவது குற்றம்.

Trump Putin Ukraine

போர் குற்றம்

புதின் ரஷ்யாவின் முப்படைகளின் தளபதி. எனவே அவர் பொதுமக்களில் ஒருவர் கிடையாது. ஆகவே அவர் மீது தாக்குதல் நடத்த அனுமதி உண்டு. இருந்தாலும், அவர் தங்கியிருக்கும் வீடு என்பது பொதுமக்களின் குடியிருப்பு பகுதி என்றே கருதப்படுகிறது.

ராணுவ மையத்தில், போர் களத்தில், காரில், அதிபர் மாளிகையில் புதின் இருந்தால் அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலும் அது போர் குற்றமாக கருதப்படாது. ஆனால், நோவ்கோரோட் பகுதியில் அமைந்திருக்கும் புதினின் வீடு, பொது மக்கள் குடியிருப்பு பகுதி என்று சொல்லப்படுகிறது.

உக்ரைன் தாக்குதல்

இங்குதான் டிச.28-29ம் தேதிகளில் உக்ரைன் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்த முயற்சித்திருக்கிறது. மொத்தம், 91 ட்ரோன்கள் இந்த தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு ட்ரோனிலும் 6 கிலோ வரை வெடிபொருட்கள் இருந்துள்ளன.

இதை வைத்து ஒரு பெரிய ராணுவ தலைமையகத்தை தரைமட்டமாக்க முடியும். ஆனால் நல்வாய்ப்பாக அனைத்து ட்ரோன்களும் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கின்றன. இப்படி இருக்கையில் இதனை பயங்கரவாத சதி செயல் என்று ரஷ்யா குற்றம்சாட்டியுள்ளது.

சிஐஏ

இந்த விவகாரம் குறித்து விசாரிக்க களமிறங்கிய சிஐஏ, உக்ரைன் ட்ரோன் தாக்குதலில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் இல்லை. போர் தொடர்பான அமைதி பேச்சுவார்த்தையை சீர்குலைக்க ரஷ்யா செய்யும் சதி இது என்று விமர்சித்திருக்கிறது.

இப்படி இருக்கையில், நியூயார்க் போஸ்ட் புதினை சர்வாதிகாரி என்று விமர்சித்திருக்கிறது. இந்த விமர்சன தலையங்கத்தை டிரம்ப் தனது சோஷியல் மீடியாவில் ஷேர் செய்திருக்கிறார்.

டென்ஷன் ஆன டிரம்ப்

தலையங்கத்தில், “அமைதி பேச்சுவார்த்தைக்கு உக்ரைன் தயாராக இருந்தாலும், புதின் பொய்களையும், வெறுப்புகளையும் பரப்பி அமைதிக்கு தடையாக இருக்கிறார். சில நாட்களுக்கு முன்னர் அலாஸ்காவில் வைத்து புதினை டிரம்ப் சந்தித்திருந்தார்.

அங்கு புதினுக்கு அமைதிக்கான வாய்ப்பு கொடுக்கப்பட்டது. இருப்பினும் அவர் அதை மதிக்கவில்லை. எனவே ரஷ்யாவுக்கு அதிக சலுகைகளை வழங்க கூடாது. கூடுதலாக கடுமையான பொருளாதாரத் தடைகளை போட வேண்டும். உக்ரைனுக்கு அதிக ஆயுதங்களை வழங்க வேண்டும்.

3ம் உலகப்போர்

உக்ரைனுக்கு எதிராக இருக்கும் டிரம்ப், மறுபுறம் ஈரான் மற்றும் வெனிசுலாவுக்கு சப்போர்ட் செய்கிறார். இதெல்லாம், டிரம்பின் திட்டங்களுக்கு இடையூறாக இருக்கிறது. இப்படி முட்டுக்கட்டை போடும் புதினிடம் இனி மென்மையை கடைபிடிக்க கூடாது” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை அப்படியே டிரம்ப் ஷேர் செய்திருக்கிறார். இதன் மூலம், விரைவில் உக்ரைனை வைத்து ரஷ்யா மீது மிகப்பெரிய தாக்குதலை அமெரிக்கா திட்டமிட இருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் கிளப்பியிருக்கின்றனர். இது மூன்றாம் உலகப்போரை நிச்சயம் தொடக்கி வைக்கும் என்றும் எச்சரித்துள்ளனர்.

Previous Story

6 සිසුන්ගේ මොඩියුලයට අසැබි වෙබ් අඩවියක යෙදුමක් ඇතුළු කර එකා හොයා ගනී

Next Story

සමලිංගික මොඩියුලය ගෝටාගෙ කාලෙ වැඩක්..- ස්ටාලින්