ரணில் பேச்சை நம்ப முடியுமா!

நஜீப்

நன்றி  28.12.2025 ஞாயிறு தினக்குரல்

சில தினங்களுக்கு முன்னர் ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிகளின் இணைவுக்கு நான் தான் காரணம் தடையாக இருக்கின்றேன் என்றால் நான் அனைத்துப் பதவிகளில் இருந்தும் வெளியேறத் தயாராக இருக்கின்றேன் என்று கட்சிக் கூட்டத்தில் ரணில் கூறி இருந்தார்.

இது ஐக்கியத்துக்கு நல்ல முன்நகர்வு அல்லது தியாகம் என்று சிலர் கருதுகின்றார்கள் பேசுகின்றார்கள். அவரது இந்த அறிவிப்பை சஜித் நம்பத் தயாராக இல்லை. இரு கட்சிகளும் இணைந்தாலும் ரணில் விசுவாசிகள் இந்த இணைவுக்குள் வந்து தன்னை வெளியேற்றிவிட்டு பதவிகளை கைப்பற்ற முனையக் கூடும் அல்லது தலைவலி தருவார்கள் என்று சஜித்துக்கு தெரியும்.

அதனால்தான் இரு கட்சிகளின் இணைவுகள் தொடர்பான தீர்க்கமான அனைத்து முடிவுகளையும் எடுக்கின்ற அதிகாரத்தை அவர் தனது பிடியில் தொடர்ந்தும் வைத்துக் கொண்டிருக்கின்றார்.

திருத்தம்: நாம் கடந்த வராம் கண்டி மணிக்கூட்டு கோபுரம் பற்றி தந்த குறிப்பில் ஒரு தவறு. இஸ்மாயில் மகன் சகி இஸ்மாயில் கடுகண்ணாவையில் பலியான நாள் 1947ஆகஸ்ட14. என்று அது வந்திருக்க வேண்டும்.

Previous Story

BBC Tamil TV News 26/12/2025

Next Story

வாழ்க்கை ஒரு முறைதான்