நஜீப்
நன்றி 28.12.2025 ஞாயிறு தினக்குரல்
அண்மையில் நடைபெற்ற பேரழிவுக்கு பல காரணங்கள் நியாயங்கள் கூறப்படுகின்றன.
1.தலதா மாளிகையில் புனித தந்த தாதுவை மக்கள் முகம் கழுவாது பார்க்கும் நிலையை அரசு ஏற்படுத்தியது காரணமாம்.
2.திருமலை புத்தர் சிலையை அவமானப்படுத்தி விட்டார்கள் அதனால்தான் இது நடந்தது.
3.தெய்வத்துக்கு விருப்பமில்லாதவர்கள் பதவிக்கு வந்ததால் கடவுள் கொடுத்த தண்டனை இது.
4.இவை எல்லாவற்றையும் விட முன்னாள் ஜனாதிபதி மஹிந்தாவுக்கு அவர் கேட்ட காரை இந்த அரசு கொடுக்கத் தவறியதால்தான் இப்படி கடவுள் பண்ணிவிட்டாராம்.
தன்னைச் சந்திக்க வந்த மொட்டு அமைப்பாளர் நாமல் முன்னிலையில்தான் இந்த கதையை மிஹிந்தலை பிரதம தேரர் வலஹேன இதனை ஊடகங்களுக்குச் சொல்லி இருக்கின்றார்.
இப்படி எல்லாம் கடவுள் மக்களிடத்தில் பலி தீர்ப்பதாக இருந்தால் அது என்ன நியாயம்.! என்ன தத்துவம்!
திருத்தம்: நாம் கடந்த வராம் கண்டி மணிக்கூட்டு கோபுரம் பற்றி தந்த குறிப்பில் ஒரு தவறு. இஸ்மாயில் மகன் சகி இஸ்மாயில் கடுகண்ணாவையில் பலியான நாள் 1947ஆகஸ்ட14. என்று அது வந்திருக்க வேண்டும்.





