யாழ். தீமூட்டலுக்குப் போனவர்கள்.!

நஜீப்

நன்றி:09.11.2025 ஞாயிறு தினக்குரல்.

மாவட்ட அபிவிருத்தித் தேர்தல் மற்றும் புகழ்பெற்ற யாழ். பல்கலைக்கழக தீ மூட்டல்களுக்கு காமினி திசாநாயக்க, சிரில் மெத்தியூ, பெஸ்டர் பெரேரா, ரணில் விக்ரமசிங்ஹ ஆகியோரை அங்கு அனுப்பியதே ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனதான்.

அதற்காக யாழ்தேவியில் நூற்றுக்கணக்கான கடையர்களைக் கொழும்பிலிருந்து அழைத்துச்சென்றே இந்த அட்டகாசத்தை இவர்கள் பண்ணினார்கள். சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் நந்தன வீரரத்ன இதனைப் பலபேர் முன்னால் பகிரங்கமாக சொன்னார்.

இதிலுள்ள வேடிக்கை என்னவென்றால் இந்த ஐதேக.வுக்கு தொடர்ச்சியாக தமிழர்கள் வாக்களித்து வந்ததுதான். அதே நேரம் சந்திரிக்க அம்மையார் ஏதோ தமிழர்களுக்கு விமோசனத்தைக் கொண்டு வந்து தருவது போல காட்டிய பாசங்கு காரணமாக அவரை நம்பி தமிழர்கள் தமது வாக்குகளை அள்ளிக் கொட்டி இருந்தார்கள். ஆனால் எதுவுமே ஆகவில்லை.

என்பிபி.க்கும் தமிழர்கள் ஆதரவு கொடுத்திருக்கின்றார்கள். நல்லது ஏதாவது நடக்குமா? அதற்காக பொறுத்திருக்கவும் முடியாது!

Previous Story

හර්ෂට වෙච්ච නස්පැත්තිය

Next Story

Full Highlights | Pakistan vs South Africa ODI Series 2025 | 3rd ODI | PCB | M3U13