சொல்லி அடித்த நமது செய்தி !

நஜீப்

நன்றி:09.11.2025 ஞாயிறு தினக்குரல்.

தமிழர் விடுதலைக் கூட்டணி தான் தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதி என்று காட்டிக் கொள்ள தொடர்ச்சியாக ஏதாவது செய்து வந்திருப்பதை நாம் கடந்த ஒரு தசாப்பதங்களுக்கு மேலாக பார்த்து வருகின்றோம். விமர்சனங்களையும் செய்தும் வந்திருக்கின்றோம்.

இதன் சூத்திரதாரி சட்டவல்லுணர் என்பது நமது கணிப்பு. இவர்கள் தமிழ் மக்களின் பிரச்சனைகள் பற்றி பேசுவதற்காக ஜனாதிபதி அணுரகுமார திசாநாயக்காவுக்கு ஒரு கடிதத்தை எழுதி இருந்தது பற்றியும் அந்தக்கடிதத்தை ஜனாதிபதி கண்டுகொள்ளவே இல்லை என்பதனையும் நாம் பல வாரங்களுக்கு முன்னர் நமது வாசகர்களுக்குச் சொல்லி இருந்தோம்.

சில தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நடந்த ஒரு ஊடகச் சந்திப்பில் இதனை அவர்களே பகிரங்கமாக ஏற்றுக் கொண்டிருந்தனர் என்பதும் தெரிந்ததே.!

மாகாணசபைத் தேர்தல் பலப்பரீட்சை வர இருப்பதால் சம்பந்தன் போன்றவர்களை ஊதிப் பெருப்பிக்க என்பிபி. தயாராக இல்லை என்பது இந்தச் சம்பவத்தில் தெரிகின்றது.!

Previous Story

කැබ් එකත් යනකොට බාර දෙන්න වෙන සංස්කෘතියක්

Next Story

சீனாவின் புதிய விமானந்தாங்கி போர்க்கப்பல் எந்த அளவு சவால் தரும்?