பெட்டிப் பாம்பு பிரதிநிதிகள்.!

-நஜீப்-

(நன்றி ஞாயிறு தினக்குரல்- 20.07.2025) 

இந்த நாட்டில் இருக்கின்ற அரசியல் கட்சிகளில் ஜேவிபி.-என்பிபி. செயல்பாடுகள்  முன்மாதிரியாகவும் புனிதமாகவும்தான் நமக்குத் தெரிகின்றது.

அவர்களில் கள்வர்கள் இருக்கின்றார்கள் என்று இதுவரை எந்த ஆதாரங்களும் இல்லை. ஆனால் சில விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. அனேகமாக அவை வக்கிரமானவை.

நம்மவர்கள் அப்படி ஏதும் தப்பு பண்ணினால் காட்டுங்கள் என்று சவால்வேறு விடப்படுகின்றது. அத்துடன் கிளிப்பிள்ளை போல அனைவரும் ஏறக்குறைய ஒன்றைத்தான் பேசி வருவதும் தெரிகின்றது.

ஆனால் சிறுபான்மை சமூகங்களைப் பொறுத்தவரை அங்கு இருக்கின்ற தமது மக்கள் பிரதிநிதிகள் தொடர்ப்பில்  திருப்தி கொள்ள முடியாது. இனம் மதம் என்ற தனித்துவங்கள் கண்டுகொள்ளத் தேவையில்ல என்று ஆட்சியாளர்கள் சொல்ல முடியாது.

கட்சி கட்டுப்பாடு என்று தமது சமூகங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்கள் எதிர்பார்ப்பு விவகாரங்களில் சிறுபான்மை உறுப்பினர் பெட்டிப் பாம்பு நிலையில்தான் அங்கு காரியம் பார்த்து வருகின்றார்கள்.

இது ஏற்புடையதல்ல.! அவர்களின் பலரது ஆளுமை மிகவும் கீழ் மட்டத்தில். மேலும் சிலர் மொழி அகராதிக்கு  புதுவார்த்தைகளை கொடுத்து தான்சார்ந்த சமூகத்தைக் கேவலப்படுத்தியும் வருகின்றனர்!

 

Previous Story

කිරිඇල්ලගේ මන්ත්‍රී දුවට හන්තාගෙන් අක්කර 43 හොරාට ලියලා...!

Next Story

பட்சோந்திக் காவல் துறை!