வெறும் 2 மணி நேரத்தில்.. சென்னை டூ மும்பை!

default

 விமானத்தை விட வேகமாக போகும்

ரயிலை கண்டுபிடித்த சீனா!

மணிக்கு 620 மைல்!!!

China’s railway authorities gave the public its first glimpse of a superfast maglev train this week in Beijing. The vehicle, which is currently undergoing testing, could cut travel times in half, according to experts. Photo: Handout

மணிக்கு 600 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ரயிலை சீனா கண்டுபிடித்துள்ளது. இது விமானத்தை விட வேகமாக இருக்கும், என்றும் விமான பயணத்தை விட சௌகரியமாக இருக்கும் என்றும் சீனா கூறியிருக்கிறது. இதனால் ரயில்வே துறையில் உலக அளவில் பெரிய மாற்றம் ஏற்பட இருக்கிறது.

காந்த லெவிட்டேஷன் (மேக்லெவ்) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ரயில்களை இயக்குவதால், ரயிலின் வேகம் அதிகமாக இருக்கிறது. இந்த முறையில் இயக்கப்படும் ரயில்களில் இதுதான் வேகமானவை என்பதால், சீனா ரயில்வே துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் பெய்ஜிங் நகரில், 17வது நவீன ரயில்வே கண்காட்சி நடைபெற்றது. அதில் இந்த ரயில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

மணிக்கு 600 கி.மீ வேகத்தில் பயணிக்கும் இந்த ரயில், அதன் முழு வேகத்தை வெறும் 7 விநாடிகளில் எட்டிவிடும் என்பதுதான் இதன் சிறப்பு. சீனாவில் இந்த ரயில் பயன்பாட்டுக்கு வருமானால் பெய்ஜிங்கிலிருந்து ஷாங்காய்க்கு வெறும் 2.30 மணி நேரத்தில் சென்றுவிடலாம்.

இதற்கு முன்னர் இந்த தூரத்தை கடக்க 5.30 மணி நேரம் வரை ஆகும். ஆனால் இப்போது இந்த புதிய ரயில் மூலம் பயண நேரம் குறையும். இதேபோன்ற ரயில் இந்தியாவில் இயக்கப்பட்டால், சென்னையிலிருந்து மும்பைக்கு வெறும் 2 – 2.30 மணி நேரத்திற்குள் சென்றுவிடலாம். விமானமும் 2.30-2.40 மணி நேரம் வரை இந்த தூரத்தை கடக்க எடுத்துக்கொள்கிறது.

அப்படி இருக்கையில், இந்த ரயில் விமான போக்குவரத்த விட வேகமானதாக இருக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. காந்தங்களை கொண்டு ரயில்களை இயக்கும் தொழில்நுட்பத்தைதான் ‘மேக்லெவ்’ என்று குறிப்பிடுவார்கள். பொதுவாக காந்தங்கள் எதிர் எதிர் திசையில் இருக்கும்போது அவை ஒன்றை ஒன்று விளக்கும்.

இதேதான் இந்த ரயிலிலும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தண்டவாளத்தில் இருக்கும் காந்தங்கள் ஒரு திசையிலும், ரயிலின் அடி பாகத்தில் பொறுத்தப்பட்டிருக்கும் பாகங்கள் வேறு திசையிலும் இருக்கும். எனவே இரண்டும் ஒன்றை ஒன்று விளக்கி, 1.1 டன் எடை கொண்ட ரயிலை சில செ.மீ வரை காந்தங்கள் உயர்த்தும்.

இப்படி உயர்த்தப்பட்ட ரயில், மின்சாரத்தின் உதவியுடன் அது முன்னோகி நகர்த்தப்படும். இதன் மூலம் சக்கரங்கள் இல்லாமல் ரயிலை அதி வேகத்தில் நம்மால் நகர்த்த முடியும். சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள டோங்கு ஆய்வகத்தில் கடந்த ஜூன் மாதம் இந்த ரயில் பற்றி ஆய்வுகள் நடந்திருக்கின்றன.

1.1 டன் எடை கொண்ட ரயிலை தண்டவாளத்தி 1,968 அடி தூரம் வரை காந்தங்கள் சுமார் 7 விநாடிகளுக்கு நகர்த்தி சென்றிருக்கின்றன. இந்த ரயில் மணிக்கு 404 மைல் வேகத்தை தொட்டிருக்கிறது. இப்போது இந்த ரயில் மணிக்கு 620 மைல் வேகத்தை எட்டியுள்ளது.

சாதாரணமாக விமானங்கள் 547-575 மைல் வேகத்தில்தான் பயணிக்கும். அந்த வகையில் இந்த ரயில் விமானத்தை விட வேகமானதாகும். தற்போது இந்த ரயிலை, ‘சீனா ரயில்வே ரோலிங் ஸ்டாக் கார்ப்பரேஷன்’ எனும் அந்நாட்டு பொதுத்துறை நிறுவனம் உருவாக்கி வருகிறது.

ரயில் வெளியில் மட்டுமல்லாத உள்ளேயும் சிறப்பான வசதிகள் செய்யப்பட்டிருக்கின்றன. போகிற போக்கை பார்த்தால், சீனா உலகம் முழுவதும் ரயில் போக்குவரத்தை மாற்றிவிடும் என்று சொல்லப்படுகிறது.

Previous Story

අගමැති කරපු වැරදි ජනාධිපති මූනටම කියයි | දැන් පූසා වගේ ඉන්න හැටි

Next Story

இந்தியாவுக்கு 500% வரி? அடாவடி காட்டும் டிரம்ப்!