பெரிய மனுஷன் செய்ற வேலையா இது!
ஈரான் அணு ஆயுதத்தை உருவாக்க முயற்சிக்கிறது. அதற்கு முன்னர், அந்நாட்டின் அணுசக்தி கட்டமைப்பை அழிக்க வேண்டும் என்று சொல்லி இஸ்ரேல், ஈரான் மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேலுக்கு டிரம்ப்பும் சப்போர்ட். அப்படியெனில் இஸ்ரேலிடம் அணு அயுதம் இல்லையா?
தன்னை சர்வதேச பஞ்சாயத்து தலைவராக காட்டிக்கொள்ளும் டிரம்ப், ஏன் இது குறித்து வாய் திறக்க மாட்டேன் என்கிறார்? என கேள்விகள் எழுந்திருக்கின்றன.
மத்திய கிழக்குக்கு அச்சுறுத்தலாகும் இஸ்ரேல்
மேற்கில் எகிப்து தொடங்கி, கிழக்கில் ஈரான் வரையிலும், தெற்கில் அரேபிய தீபகற்பம் தொடங்கி, வடகில் துருக்கி வரை மத்திய கிழக்கு விரிவடைந்திருக்கிறது. மொத்தமாக 17-18 நாடுகள் இந்த எல்லைக்குள் இருக்கின்றன.
இவ்வளவு நாடுகளில் அணு குண்டு வைத்திருக்கும் ஒரே நாடாக இஸ்ரேல் மட்டுமே அறியப்படுகிறது. அது வெளிப்படையாக, தங்களிடம் அணு குண்டு இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளவில்லை. அதேசமயம், எங்களிடம் அணுகுண்டு இல்லை என்றும் உறுதியாக சொல்லவில்லை.

அணு ஆயுத தடை
அதாவது 1945ம் ஆண்டு தொடங்கி அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சீனா ஆகிய நாடுகள் தொடர்ச்சியாக அணு குண்டுகளை தயாரித்தும் பாரிசோதித்தும் வந்தன. இது போன்ற குண்டுகளின் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை ஹிரோஷிமா, நாகசாகி சம்பவத்தில் மொத்த உலகமே அறிந்துக்கொண்டது. எனவே, இனி வரும் நாட்களில் உலக நாடுகள் அணு குண்டை தயாரிக்க கூடாது என்று ஐநா ஒரு முக்கிய தீர்மானத்தை கொண்டு வந்தது.
சர்வதேச நாடுகள் கொண்டு வந்த முக்கிய ஒப்பந்தம்
அதன் பெயர்தான் ‘அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தம்’ (NPT – Nuclear Non-Proliferation Treaty). இது 1970 இல் நடைமுறைக்கு வந்தது. அணு ஆயுதங்கள் மற்றும் அணுசக்தி தொழில்நுட்பங்களின் பரவலைத் தடுப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். இதில் மூன்று முக்கியமான விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.
2. அணு ஆயுதத்தை குறைப்பது
3. அணுசக்தியை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவது
ஆக்கப்பூர்வமான அணுசக்தி
முதல் விஷயத்தை பொறுத்தவரை, அணு ஆயுதங்கள் இல்லாத நாடுகள் அணு ஆயுதங்களை உருவாக்கவோ அல்லது வாங்கவோ கூடாது. அணு ஆயுத நாடுகள் மற்ற நாடுகளுக்கு அணு ஆயுதத் தொழில்நுட்பத்தை வழங்கக்கூடாது.
இரண்டாவது அம்சத்தில், அணு ஆயுதங்களை வைத்திருக்கும் நாடுகள் தங்களது அணு ஆயுதங்களை படிப்படியாகக் குறைத்து, இறுதியில் முழுமையாக அகற்ற வேண்டும்.
மூன்றாவது, அனைத்து நாடுகளுக்கும் அணுசக்தியை மின்சாரம் உற்பத்தி, மருத்துவம், விவசாயம் என ஆக்கப்பூர்வமான நோக்கங்களுக்காக பயன்படுத்துவதற்கான உரிமை உண்டு.
ஈரானின் நிலைப்பாடு
இந்த உரிமையைப் பெறுவதற்கு, அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டோம் என்பதை நிரூபிக்க வேண்டும். சர்வதேச அணுசக்தி முகமையின் (IAEA) பாதுகாப்பு வழிமுறைகளுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே உரிமை வழங்கப்படும்.
ஈரான் NPT ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. அது IAEA பாதுகாப்பு வழிமுறைகளையும் ஏற்றுக்கொண்டிருக்கிறது. நாங்கள் வைத்திருக்கும் அணுசக்தி கட்டமைப்புகளை கொண்டு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளைதான் செய்கிறோம் என்று கூறி வருகிறது. இதனை IAEA அமைப்பு உறுதி செய்திருக்கிறது.
குட்டையை குழப்பும் இஸ்ரேல்
ஆனால், ஈரான் அதிக அளவுக்கு யுரேனியத்தை செறிவூட்டுகிறது. இதை வைத்து அணு ஆயுதத்தை தயாரிக்க திட்டமிட்டு வருகிறது என்று சொல்லி, ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதல் காரணமாக தற்போது ஈரானும் பதில் தாக்குதலை நடத்தியுள்ளது. இது மத்திய கிழக்கில் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
இவ்வளவு நியாம் பேசும், இஸ்ரேல் ஏன் இதுவரை NPT ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை? அப்படியெனில் அந்நாடு அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்றுதானே அர்த்தம்? இதையெல்லாம் வைத்து பார்த்தால், மத்திய கிழக்குக்கு அச்சுறுத்தல் ஈரான் கிடையாது, இஸ்ரேல்தான்.
எனவே இஸ்ரேல் எப்போது அணு ஆயுதங்களை கைவிட்டு NPT ஒப்பந்தத்தில் இணையப்போகிறது என்பததான் தற்போதைய கேள்வி.
தன்னை உலக நாடுகளுக்கான பஞ்சாயத்து தலைவராக காட்டிக்கொள்ளும் டிரம்ப், ஏன் இந்த விஷயத்தில் மௌனம் சாதிக்கிறார்?
இஸ்ரேலுக்கு ஏன் அவர் ஆதரவு தெரிவிக்கிறார்?
அமெரிக்கா NPT ஒப்பந்தத்தை நீர்த்துப்போக செய்கிறதா?
பெரிய மனுஷன் செய்யுற வேலையா இது? என்றெல்லாம் கேள்விகள் எழுந்திருக்கின்றன





