இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் ஒரு வாரமாகத் தொடர்ந்து வருகிறது. இந்த தாக்குதலில் அமெரிக்கா நேரடியாகத் தலையிடவில்லை என்ற போதிலும் இஸ்ரேலுக்கு முழு ஆதரவைக் கொடுத்து வருகிறது. இதற்கிடையே ஈரான் விவகாரத்தில் இன்னும் ஒரு வாரத்தில் மிகப் பெரிய விஷயம் நடக்கும் என டிரம்ப் கூறியிருக்கிறார்.
அணு ஆயுதங்கள் விவகாரத்தில் அமெரிக்கா உடனான பேச்சுவார்த்தையில் ஈரான் உடன்பாட்டை எட்ட மறுத்தே வந்தது. இந்தச் சூழலில் தான் திடீரென கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஈரான் மீது ஆபரேஷன் ரைசிங் லயன் கீழ் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது. ஈரானை நோக்கி இஸ்ரேல் சரமாரி தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேல் ஈரான் அதற்கு ஈரானும் பதிலடி கொடுக்கவே நிலைமை மோசமாக உள்ளது. இரு நாடுகளும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றன. அதேநேரம் இந்தத் தாக்குதலில் இப்போது வரை அமெரிக்கா நேரடியாக உள்ளே வரவில்லை. இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்தாலும் நேரடியாக மோதலில் இறங்கவில்லை.
டிரம்ப் பேச்சு இதற்கிடையே ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதா அல்லது ஈரானின் அணு ஆயுத தளங்களை அமெரிக்கா குறிவைக்கிறதா என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இருப்பினும், இதற்குப் பதிலளிக்க டொனால்ட் டிரம்ப் மறுத்துவிட்டார்.
ஈரான் இப்போது பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்தாலும் கூட, ஏற்கனவே காலம் கடந்துவிட்டதாக டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அடுத்து டிரம்ப் சொன்னது தான் பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஒரே வாரம் அதாவது டிரம்ப், “அடுத்த வாரம் பெரிய விஷயம் நடக்கலாம்.. யாருக்கும் ஒரு வாரத்திற்குள்ளாகக் கூட பெரிதாக எதாவது நடக்கலாம்” என்று கூறினார்.
ஈரானின் அரசியல் தலைமையைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்படலாம் எனத் தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், டிரம்ப் இதுபோல பேசியுள்ளது பரபரப்பை கிளப்பியுள்ளது. அமெரிக்கா உடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் முன்வந்து இருப்பதாக டிரம்ப் குறிப்பிட்டார். இருப்பினும், எது தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளனர்.. அல்லது ஈரான் எப்போது பேச்சுவார்த்தைக்கு அழைப்பு கொடுத்தது உள்ளிட்ட விவரங்களை டிரம்ப் பகிர்ந்து கொள்ளவில்லை.
டிரம்ப் மேலும் பேசுகையில், “ஈரான் எந்தவொரு வான் பாதுகாப்பு அமைப்பும் இல்லாமல் முற்றிலும் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது” என்றார். மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் தொடர்ந்து ஈரான் மீது தாக்குதல் நடத்தச் சொன்னதாகவும் டிரம்ப் குறிப்பிட்டார். இஸ்ரேலிடம் சரணடைய மாட்டோம்.. அமெரிக்கா தலையிட்டால் அவர்களையும் தாக்குவோம்!
ஈரான் தலைவர் கமேனி சூளுரை கமேனி பற்றி டிரம்ப் ஈரானின் உயர்மட்ட தலைவர் அயத்துல்லா கமேனி குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பியதற்கு “குட் லக்” என்று மட்டும் டிரம்ப் பதிலளித்தார். பிறகு ஒரு நொடி யோசித்த டிரம்ப், ஈரான் மீதான பொறுமை போய்விட்டதாகவும் தெரிவித்தார்.
ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் அமெரிக்காவும் இணையுமா என்ற கேள்விக்கு அவர், “நாங்கள் அதை (ஈரான் மீதான தாக்குதல்) செய்யலாம் செய்யாமலும் போகலாம். அதாவது, நான் என்ன செய்யப் போகிறேன் என்று யாருக்கும் தெரியாது..
ஈரான் நிறையச் சிக்கலில் சிக்கியுள்ளது.. பொறுத்திருந்து பாருங்கள்” என்றார் இஸ்ரேல் ஈரான் இடையேயான மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த நேரத்தில் டிரம்பின் இதுபோன்ற பேச்சுகள் உலகளவில் கவனம் பெற்றுள்ளது. இருப்பினும், அடுத்த சில நாட்களில் ஈரான் விவகாரம் எதை நோக்கிச் செல்கிறது என்பது தெளிவாகத் தெரிய வரும்!





