-நஜீப் பின் கபூர்-

சில மணி நேரங்களுக்கு முன்னர் ஈரானில் இஸ்ரேலுக்காக உளவு பார்த்த பெரும் (73) எண்ணிக்கையானவர்கள் கையும் களவுமாக பிடிபட்டிருக்கின்றார்கள்.

இவர்கள் அதற்கென நன்கு பயிற்றுவிக்கப்பட்டு அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதும், அவர்களில் கணிசமானவர்கள் இந்தியாவில் பாதுகாப்புப் படைப் பிரிவுகளில் பணிபுரிதவர்கள் என்றும் தெரிய வந்திருக்கின்றது.

ஈரானுக்குள்ளேயே இஸ்ரேல் பாரிய தாக்குதல்களை வெற்றிகரமாக நடாத்துவதற்கு இவர்கள் காரணமாக இருந்திருப்பதாகவும் தகவல்கள் கிடைத்து வருகின்றன.
இதற்கு முன்னர் கட்டாரில் இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததற்காக ஏழு இந்தியர்கள் கைது செய்ப்பட்டு விசாரணைகளில் குற்றவாளிகளாக இனம் காணப்பட்டு மரண தண்டனையை எதிர் நோக்கி இருந்தனர். பின்னர் இந்திய அரசு நேரடியாக மண்றாடி அவர்களை விடுவித்துக் கொண்டதும் தெரிந்ததே.
எனவே இப்படியான பெரும் எண்ணிக்கையினர் தாம் தொழிலுக்காக அரபு-இஸ்லாமிய நாடுகளுக்காக வந்திருப்பதாக காட்டிக் கொண்டு இஸ்ரேல்-மொசாட் பணத்தை வாங்கிக் கொண்டு சதிவேலைகளில் ஈடுபட்டு வந்திருப்பதை இப்பபோது அந்த நாடுகள் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளன.
இதனால் எதிர்வரும் நாட்களில் இந்தியர்களுக்கு அரபு-முஸ்லிம் நாடுகள் தொழில் வழங்குவதில் ஆப்பு வைக்கக் கூடும். அத்துடன் ஏற்கொனவே அங்கிருப்போரை வெளியேற்றவும் கூடும்.
இப்படி ஒரு நிலை வரும் போது இந்தியாவில் இலட்சக்காணக்கானவர்கள் தமது தொழில்களை இழப்பார்கள். இதில் நிறையவே அப்பாவிகளும் மாட்டிக் கொள்ள இடமிருக்கின்றது.





