நம்பமுடியாத சந்திப்புகள்!
கொழும்பு நகர முதல்வர் ஆளும் தரப்பில் எதிரணியில் என்று ஒன்றுக்கொன்று முரணான கருத்துக்கள் செய்திகள் நிமிடத்துக்கு நிமிடம் வெளியாகி அது அனேகமாக கேளிக் கூத்தாகவும் அமைந்து விடுகின்றன.
கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருப்போர் எல்லோரும் ஊடகக்காரர்கள் என்ற ஒரு நிலை நாட்டில் இருப்பதால் இந்தக் குழப்பங்கள் அங்கே…!
அது அப்படி இருக்க நாம் மலையக முஸ்லிம்களின் தலைநகர் என்று அழைக்கின்ற அகுரண பிரதேச சபை தொடர்பாகவும் ஒரு கொதிநிலை தெரிகின்றது.
தேர்தலுக்கு முன்னரே முடிவுகள் எப்படி அமையும் என்று நாம் என்பிபி. நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தவிசாளர் வேட்பளர் மற்றும் என்பிபி. முக்கியஸ்தர்களை எச்சரிக்கை செய்திருந்தோம்.
குறைந்தது முஸ்லிம் வட்டரங்களில் (பத்தில்) மூன்று அல்ல நான்கு வட்டாரங்ளை அவர்கள் கட்டாயம் வெற்றி கொண்டுதான் ஆக வேண்டும் என்றும் கார்டியன் செய்திக் குறிப்பில் தேர்தலுக்கு முன்னரே சொல்லி இருந்தோம்.
ஆனால் அது நடக்கவில்லை. இது முற்றிலும் அந்த அமைப்பு நிருவாகிகள் விட்ட தவறுகள் என்பது எமது நிலைப்பாடு. அதனால் இன்று பெரும்பான்மையில் இழுபறி நிலை.
.………… ? ………….
அதிக ஆசனங்களை இஸ்திகார் தலைமையிலான…. அணி கைப்பற்றி இருக்கின்றது.
அந்த எண்ணிக்கை 13.
ஆளும் என்பிபி. 10.
சுயேட்சைகள்.2
ஐதேக.1
தரசு.1
மொட்டு.1
சுயேட்சை.1
முகா.1 என்று 30 உறுப்பினர்.
நமக்கு வருகின்ற தகவல்களில் அரசியலில் என்னதான் நண்பர்களும் எதிரிகளும் கிடையாது என்றாலும் எதிரும் புதிருமான சந்திப்புக்களும் புரூட்டஸ் நீயுமான என்ற ஆச்சர்யமான பல்டிகளுக்கும் அங்கு நிறையவே இடமிருக்கின்றது.
அதிஸ்டச் சீட்டிலுப்புக் கூட தலைவிதியை முடிவு செய்யலாம். தவிசாளர் நியமனத்தின் பின்னர் அந்தரங்கத்தில் நடந்த அதிரடிகளை (இரகசிய) பெயர் முகவரிகளுடன் தரலாம் என்று இருக்கின்றோம்.





