டிரம்பின் வரி: உலகத் தலைவர்கள் போராடத் தயார்

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்த இறக்குமதி வரி குறித்து, உலக தலைவர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

Latest Tamil News

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற முதல் நாளிலிருந்து பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். தற்போது அவர் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு வரி விகித்தை அறிவித்தார்.

இதில் 15 நாடுகளுக்கு எவ்வளவு சதவீத வரி என்பது குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. இந்திய பொருட்களுக்கு 26 சதவீத இறக்குமதி வரி விதித்துள்ளார். இது குறித்து உலக தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விபரம் பின்வருமாறு:

Trump Taxes Cartoons

கனடா பிரதமர் மார்க் கார்னி

அதிபர் டிரம்பின் வரி விதிப்பிற்கு எதிராக போராடுவோம். எக்கு, அலுமினியம் மற்றும் ஆட்டோமொபைல்களுக்கான இறக்குமதி வரி, கோடிக்கணக்கான கனடா மக்களை நேரடியாக பாதிக்கும். இந்த வரி விதிப்பிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும்.

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்

வர்த்தகப் போரை எதிர்த்து போராட தயாராகி விட்டோம். நாங்கள் எதையும் சமாளிப்போம்.

ஸ்பெயின் பிரதமர், பெட்ரோ சான்செஸ்

எங்கள் நாடு தொழிலாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை செலுத்தும். தொழிலாளர்களை பாதுகாக்கும். உலகத்திற்காக தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.

சுவீடன் பிரதமர், உல்ப் கிறிஸ்டர்சன்

நாங்கள் ஒரு வர்த்தகப் போரை விரும்பவில்லை. அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்ற விரும்புகிறோம். எங்கள் நாடுகளில் உள்ள மக்கள் சிறந்த வாழ்க்கையை வாழ விரும்புகிறோம்.

இந்தியா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் அமெரிக்க அறிக்கை

 இந்தியா மீது குற்றச்சாட்டுகளை அடுக்கும் அமெரிக்க அறிக்கை

ஐரிஷ் வர்த்தக அமைச்சர், சைமன் ஹாரிஸ்

அயர்லாந்தும், ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண தயாராக இரு்கிறோம். பேச்சுவார்த்தை மற்றும் உரையாடல் எப்போதும் முன்னோக்கி சிறந்த வழி.

இத்தாலி பிரதமர் மெலோனி

வரத்தக போரை தவிர்க்க வேண்டும். அதிபர் டிரம்புடன் இணைந்து பணியாற்றுவோம். அமெரிக்காவுடன் இணைந்து எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.

பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் வர்த்தகப் போரைத் தவிர்க்க விரும்புகிறோம்.

ஆஸ்திரேலியா பிரதமர் ஆன்டனி அல்பனீஸ்

இது ஒரு நண்பரின் செயல் அல்ல. தனது நாடு பதில் வரி விதித்து பழிவாங்காது.

ஆஸ்திரேலியா அமெரிக்க பொருட்கள் இறக்குமதிகளுக்கு எந்த வரியும் வசூலிக்கவில்லை. இந்த வரிகள் எதிர்பாராதவை அல்ல. ஆனால் நான் தெளிவாகச் சொல்கிறேன்.

அவை முற்றிலும் தேவையற்றவை. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்கா ஆஸ்திரேலியாவின் வலிமையான இராணுவ நட்பு நாடாக இருந்து வருகிறது. எங்கள் அரசாங்கம் எப்போதும் ஆஸ்திரேலிய மக்களுக்கு ஆதரவாக இருக்கும்.

Previous Story

லசந்தாவைக் கொன்றது எப்படி கேட்டுப்பாருங்கள்.!! ?

Next Story

பிரதமர் நரேந்திர மோடி- வங்க தலைவர் முகமது யூனுஸ் சந்திப்பு!