முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் துக்கு 16 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை

வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். ரஞ்சித் மற்றும் அவரது தனிப்பட்ட செயலாளர் சாந்தி சந்திரசேன ஆகியோருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் தலா 16 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் குற்றவாளியாகக் காணப்பட்டமை தொடர்பில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், இருவருக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இருவர் மீதும் இலஞ்ச ஒழிப்பு ஆணையம் இந்த வழக்கைத் தாக்கல் செய்திருந்தது

 

இலஞ்ச ஒழிப்பு ஆணையம்

வட மத்திய மாகாண முதலமைச்சராக இருந்த காலத்தில் சட்டவிரோதமான முறையில் எரிபொருள் கொடுப்பனவுகளாக 2080500 ரூபாய் பெற்றமை தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணையம் இந்த வழக்கைத் தாக்கல் செய்தது

Previous Story

காசாவில் 10 நாட்களில் 322 குழந்தைகள் பலி

Next Story

அமெரிக்க:ஈரான்-ஹவுதிகள் போர்