உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: குற்ற ஒப்புதல் வழங்கிய சந்தேகநபர்?

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு, வருடக்கணக்கில் தடுத்து வைக்கப்பட்டிருந்த முகமது நிலாப்தீன் முகமது றிம்சான் என்பவரே, கொழும்பு மேலதிக நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் இவ்வாறு குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர் கொழும்பை அண்மித்த பாதுக்கை பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.

Sri Lankan Church still seeking justice for 2019 Easter Sunday bombings - Vatican News

இரகசிய தொடர்பாடல் வழிமுறை

மேற்குறித்த றிம்சான், சிரியாவில் ஐ.எஸ். இயக்கத்தின் மூலம் ஆயுதப் பயிற்சி பெற்றுள்ளதாகவும், அந்த இயக்கம் பயன்படுத்தும் இரகசிய தொடர்பாடல் வழிமுறையை கையாள்வதில் பயிற்சி பெற்ற ஒருவர் என்றும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: குற்ற ஒப்புதல் வாக்குமூலம் வழங்கிய சந்தேகநபர் | Easter Sunday Attack Incident

இந்நிலையில் இலங்கையில் ஐ.எஸ் இயக்கத்தை கட்டியெழுப்புவதற்கு நிதி மற்றும் ஏனைய பங்களிப்புகளை வழங்கியுள்ளதாக அவர் குற்ற ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Previous Story

தமிழ் தேசியத்துடன்  வாழாத சுமந்திரன்!

Next Story

பொங்கலை முன்னிட்டு வெளியாகும் 10 படங்களும் அவற்றின் கதையும்!