மத்திய கிழக்கில் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்தே வருகிறது. இதற்கிடையே இஸ்ரேல் தங்கள் மீது நடத்திய தாக்குதலுக்குத் தக்க பதிலடி தரப்படும் என்றும் அது வலி மிகுந்த ஒன்றாக இருக்கும் என்றும் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி அமேனி எச்சரித்துள்ளார்.
இஸ்ரேலின் வடக்கு எல்லையிலும் நிலைமை மோசமாகி இருக்கும் சூழலில், அங்குப் பிராந்திய போர் வெடிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கடந்தாண்டு அக். மாதம் இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்திய நிலையில், காசாவில் உள்ள ஹமாஸ் படைக்கு எதிராக இஸ்ரேல் போரை அறிவித்தது.
காசாவில் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியது. தாக்குதல்: காசா தாக்குதலைக் கண்டித்து லெபனானில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா படை இஸ்ரேல் மீது தாக்குதலை நடத்தியது. இதையடுத்து ஹிஸ்புல்லா மீதும் இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், அந்த அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா கொல்லப்பட்டார்.
இதனால் ஆத்திரமடைந்த ஈரான் கடந்த அக். 1ம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இதில் பெரிய பாதிப்பு இல்லை என்றாலும் இது சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்தது.
ஹிஸ்புல்லாவை மொத்தமாக அழிக்க திட்டம்?
இஸ்ரேல் பகீர்! அடுத்து என்ன கடந்த அக். 26ம் தேதி இஸ்ரேல் இதற்குப் பதிலடி கொடுத்தது. இதில் சில ஈரான் வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து மீண்டும் இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தலாம் என்று அஞ்சப்படுகிறது.
அப்படித் தாக்குதல் நடந்தால் அது பிராந்திய போராக வெடிக்கும். இதற்கிடையே இஸ்ரேலுக்கு ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பதிலடி
இஸ்ரேல் தங்கள் மீது நடத்திய தாக்குதலுக்கு வலி மிகுந்த பதிலடி தரப்படும் என்று கமேனி உறுதியளித்தார். லெபனான் நாட்டில் உள்ள ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா பயங்கரவாதிகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதலைத் தீவிரப்படுத்தியிருக்கும் நிலையில், இந்த எச்சரிக்கை வந்துள்ளது.
இது தொடர்பாக கமேனி மேலும் கூறுகையில், “அமெரிக்கா மற்றும் யூத ஆட்சியாளர்கள் ஆகிய இரண்டு எதிரிகளும் நிச்சயமாக மிக மோசமான பதிலடியைப் பெறுவார்கள்” என்று அவர் எச்சரித்தார். இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி தருவோம் என்று ஈரான் தொடர்ந்து சொல்லி வரும் நிலையில், கமேனியின் இந்தக் கருத்துகள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேலை காலி செய்ய சீக்ரெட்டாக உளவாளிகளை இறக்கும் ஈரான்.. மொசாட் அமைப்பை கூட விடல! பகீர் திட்டம் அணு ஆயுதம்: ஈரான் உச்ச தலைவர் கமேனியின் மூத்த ஆலோசகர் கமல் கர்ராசி மேலும் கூறுகையில், “ஈரான் வசம் அணுசக்தி உள்ளன.
அதன் கொள்கை என்ன என்பதும் அனைவருக்கும் தெரியும். அதேநேரம் ஈரானை யாராவது அச்சுறுத்தினால், அதற்கு நாங்கள் எங்கள் அணு ஆயுத கொள்கையை மறுபரிசீலனை செய்யவும் தயங்க மாட்டோம். அணு ஆயுதங்களை உருவாக்கும் திறன் எங்களிடம் உள்ளது.
இதில் எந்த எல்லைக்கும் செல்லவும் தயாராகவே இருக்கிறோம்” என்றார். ஹிஸ்புல்லா: இது ஒரு பக்கம் இருக்க மற்றொருபுறம், இஸ்ரேல் கடற்படை நடத்திய ஆப்ரேஷனில் லெபனானின் பேட்ரூனில் ஹிஸ்புல்லா ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அந்த ஹிஸ்புல்லா கடல்சார் பயிற்சி பெற்று வந்ததாகவும் அவரை இப்போது தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது. இதுபோல இஸ்ரேல் தனது வடக்கு எல்லையில் ஹிஸ்புல்லா மீதான தாக்குதலைத் தீவிரப்படுத்தியது. இதற்கு ஹிஸ்புல்லாவும் பதிலடி தரும் நடவடிக்கையில் இறங்கியுள்ள நிலையில், எல்லையில் பதற்றமான சூழலே நிலவி வருகிறது.