சிறுபான்மை உரிமை தினம்-18

-ஷைஸ் ஆஹில் ஜெஸ்வான்-

1992ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை மத ரீதியான, மொழி ரீதியான, இன ரீதியான சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த தனிநபர்களின் உரிமை குறித்த சாசனத்தை பிரகடனம் செய்தது. அதன் அடிப்படையிலேயே டிசம்பர் 18ஆம் தேதியன்று இந்த தினம் அனுசரிக்கப்பட்டுவருகிறது.கலாச்சார ரீதியாக, மொழி, இன ரீதியாக, தேச ரீதியாக சிறுபான்மையினராக இருப்பவர்களின் அடையாளங்கள் மதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட வேண்டுமென்கிறது ஐ.நாவின் பிரகடனம்.

சிறுபான்மையினரின் நிலையை மேம்படுத்துவது என்பது அந்தந்த நாட்டு அரசுகளின் கடமை என்றும் கூறுகிறது. இந்த சாசனம். இந்தியாவில் 1992ல் தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம் நிறைவேற்றப்பட்டு சிறுபான்மையினருக்கான ஆணையம் அமைக்கப்பட்டது. துவக்கத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், பௌத்தர்கள், சீக்கியர்கள், பார்சிக்கள் ஆகிய ஐந்து சிறுபான்மையினர், அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ற விதத்தில் பிரதிநிதித்துவம் செய்யப்படுவதில்லை என்கிற புகாரும் இருக்கிறது.

“ஜனநாயகத்தில் உள்ள ஒரு சிக்கல் என்னவென்றால் அது எளிதில் பெரும்பான்மை வாதமாக மாறிவிடும் ஆபத்தையும் உள்ளடக்கியது என்பதுதான். எதாவது ஒரு வகையில் சிறுபான்மையினராக இருப்பவர்களை எதிரிகளாகச் சித்தரித்து பெரும்பான்மையினரின் வாக்குகளைப் பெற அரசியல் கட்சிகள் முயலும். அது நடந்தும் இருக்கிறது. இந்தப் போக்கு இந்தியாவில் மட்டுமல்ல, ஐரோப்பா, அமெரிக்கா, ஆப்பிரிக்கா என எல்லா கண்டங்களிலும் நடந்துவருகிறது.

இலங்கையில் ஒரு நாடு. ஒரு சட்டம் என்று சொல்கின்றார்கள். இதற்கான சட்டத்தை உருவாக்க ஞானசார என்ற கடும் போக்கு இனவாத மதத் தலைவர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டிருக்கின்றது. அண்மைக் காலங்களில் இருந்து இலங்கையில் கடும் இனவாதப் போக்கு காணப்படுகின்றது. சிறுபான்மையினர் என்றால் இந்த நாட்டில் அடங்கித்தான் வாழ வேண்டும். அவர்கள் உரிமைகள் சலுகைகளை என்றெல்லாம் பேசக் கூடாது அரசியல் உரிமைகளோ மத உரிமைகளோ இல்லை என்று சொல்லுமளவுக்கு இங்கு சிறுபான்மை இனங்களுக்கு நெருக்குதல்கள் அதிகரித்தக் காணப்படுகின்ற ஒரு பின்னணியில்தான் சர்வதேசம் இன்று சிறுபான்மையினர் உரிமை தினத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றது.

Previous Story

ஹாங்காங்கில் இன்று சட்டசபைக்கானதேர்தல

Next Story

இலங்கையில் 43 இந்திய மீனவர்கள் கைது