உறுதியுமான முடிவுக்கு தயாராகும் இலங்கை தமிழரசுக் கட்சி

அதன் அடிப்படையிலேயே எதிர்வரும் 14 ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளருக்கான ஆதரவு நிலைப்பாட்டை இறுதியும் உறுதியுமாக தமிழரசுக்கட்சி வெளியிடும் என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்துள்ளார்.

கடந்த 1 ஆம் திகதி இடம்பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் எம். எ சுமந்திரன் தலைமையிலான கூட்டத்தில் கலந்துகொண்ட சி.வி.கே சிவஞானம் கூட சஜித் ஆதரவு நிலைப்பாட்டுக்கு வாக்களிக்காமையும் ஒரு பேசுபொருள்.

இதன் பின்னணியில் தனக்குரிய அரசியல் நாட்டத்தை பலப்படுத்திக்கொள்ள சுமந்திரன் இவ்வாறான நகர்வுகளை மேற்கொள்வதாக கட்சிக்குள் இருந்து குற்றச்சாட்டுக்களும் எழுகின்றன.

தமிழ் தேசியத்திற்கென ஒரு வலுவை வழங்க சிந்தித்து செயலாற்றும் தமிழ் மக்கள் ஒருபுறம் இருக்க, மறுப்புறம் சுயநல தேவைக்காக தமிழ் மக்களின் உரிமைகளை பலிகடா ஆக்கும் நிலை காணப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இது தமிழ் மக்களை துருவப்படுத்தலுக்கான முறைக்கு கொண்டு செல்லும் என தமிழ் அரசியல் ஆய்வாளர்களால் கவலை வெளியிடப்படுகிறது.

இவ்வாறான பிரிவினையை அடிப்படியாக வைத்தே தமிழ் மக்கள் மீதான அரசியல் சுமைகள் சுமத்தப்படுகின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த காலங்களை போல் அல்லாமல் தமிழ் மக்களின் எண்ணங்கள் மாற்றம் அடைந்துள்ளது. அந்த எண்ணங்களை அடிப்படையாக வைத்து ஒரு ஒற்றுமை அரசியலை தமிழர் தரப்புக்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது முக்கிய எதிர்பார்ப்பாகவும் காணப்படுகிறது.

இவ்வாறான தமிழ் அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பிலும், தமிழ் பொது வேட்பாளர் மீது தமிழ் மக்கள் எவ்வாறான நிலைப்பாடுகளை கொண்டுள்ளனர் என்பது தொடர்பிலும் ஐபிசி தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி. வி விக்னேஸ்வரன் பல்வேறு கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தார் .

சுயநல அரசியலுக்காக சிலர் தமிழ் மக்களின் வாக்குகளை விற்பனை செய்யவதாகவும் குற்றம் சுமத்தியிருந்தார்.

Previous Story

முஸ்லிம் அல்லாத பெண்களிடம் ஹிஜாப் சேலஞ்ச், யூடியூபர் கைதால் சர்ச்சை 

Next Story

'அரசியல் கட்சிகள் என்பது நமது மதமோ அதன் தலைவர்கள் நமது இமாமோ அல்ல'