வாராந்த அரசியல் 12.12.21

நஜீப்

ஞானத்தை நம்பும் ஏமாளிகள்!

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஞானசார தேரர் தப்போவன ரத்தன தேரருக்கு தொலைபேசியல் தொடர்பு கொண்டு தூசன வார்த்தையில் பேசி அந்தத் தேரரை அச்சுறுத்தி இருந்தார். அவர்களது அந்த உரையாடல் புனிதமான பௌத்த சமயத்துக்குப் பெரும் களங்கமாக அமைந்து விட்டது என்பது பெரும்பால பௌத்த தேரர்களினதும் சாதாரண சிங்கள மக்களினதும் அபிப்பிரயம். இப்படி எல்லாம் பேசுகின்ற ஒரு மனிதன் எப்படி ஒரு பௌத்த தேரராக இருக்க முடியும் என்று பலரும் கேள்வி எழுப்புகின்றார்கள். ஆனால் வேடிக்கை என்னவென்றால் அந்த உரையாடலிலும் அவர் தம்பியா, மரக்கலயா என்று மறுமுனையில் பேசிய தேரரைத் திட்டித் தீர்த்திருக்கின்றார். ஆனால் கடிதத் தலைப்பு மட்டும் வைத்து கட்சி நடாத்தும் ஒரு முஸ்லிம் தலைவர் என்று தன்னை நினைத்துக் கொண்டிருப்பவர் ஞானத்துக்கு சான்றிதழ் கொடுத்து அவரைப் புகழ்ந்து தள்ளி வருகின்றார். வடக்கு மற்றும் கிழக்கில் ஞானத்துக்கு நல்ல வரவேற்பு என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவும் கதை சொல்லி வருகின்றது.

டைம்ஸூக்கு வழக்கு!

புகழ் பெற்ற அமெரிக்காவின் நிவ்யோர்க் டைம்ஸ் ஏழு மில்லியன் (7.3) பணம் தொடர்ப்பில் தன்னைப் பற்றி பொய்யான செய்திகளைச் சொல்லி தனக்கு அபகீர்த்தியை உண்டு பண்ணி விட்டது. எனவே அதற்கு எதிராகத் தான் வழக்குத் தாக்கல் செய்ய இருக்கின்றேன். இப்படி ஒரு கருத்தை நமது பிரதமர் எம்.ஆர். ஒரு சந்தர்ப்பத்தில் சொல்லி இருந்தார். ஆனால் இன்று வரை அவர் அப்படி டைம்சுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதிலிருந்து டைம்ஸ் சொன்ன கருத்து உண்மை என்பது உறுதியாகி இருக்கின்றது. இந்தக் கதையை கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடந்த நாடாளுமன்ற அமர்வில் ஜேவிபி. தலைவர் அணுர குமாரதிசாநாயக்க சுட்டிக் காட்டினார். அந்த வேளை நமது பிரதமருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கு எதிராக ஆளும் தரப்பில் எவரும் குரல் எழுப்பாமல் அமைதியாக அணுரவின் பேச்சை செவிமடுத்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டொலர் பசியின் உச்சம்!

தற்போது நாட்டில் டொலர் நெருக்கடியால் பொருட்களின் இறக்குமதி தடைப்பட்டிருக்கின்றது. நமது தொழிலாளர்கள் வருடாந்தம் ஏழு மில்லியன் வரை நாட்டுக்கு பணம் அனுப்பிக் கொண்டிருந்தார்கள். இது தற்போது மூன்றாக வீழ்ச்சியடைந்திருக்கின்றது. உள்நாட்டில் ஊழியர்களின் சம்பளத்தை வழங்குவதற்கு பியகம அச்சு இயந்திரத்தை எவ்வளவு வேகமாக இயக்கினாலும் பணப் பசியைத் தீர்கக் முடியாதிருக்கின்றது. எனவே நகர்கள் பூராவிலும் இருக்கின்ற அச்சுக் கந்தோர்களைப் போல் அரசாங்கம் அச்சு இயந்திரங்களை இறக்குமதி செய்துதான் இதனை நிவர்த்தி செய்ய முடியும் என்று தோன்றுகின்றது. இது எவ்வளவு தூரம் ஆபத்தானது அழிவை நோக்கிய பயணம். தற்போது குறிப்பிட்ட தொகையை விட டொருக்கு இன்னும் பத்து ரூபாவுக்கு மேல் தருவதாக மத்திய வங்கி ஆளுநர் கப்ரால் கூறுகின்றார். அவரோ வெளியில் டொலர் இருநூற்றி நாற்பது ரூபாய்க்குப் போகின்றது என்றும் கூறுகின்றார். அப்படி இருக்க எவராவது முப்பது ரூபா நஷ்டத்தில் அரச வங்கிக்கு வந்து இதனை மாற்றுவார்களா? அவர்கள் என்ன மந்த புத்திக்காரர்களா?

உயிரோடு எரிந்த பிரியந்த!

பாகிஸ்தான் சியல்கோட்டில் உயிரோடு எரிக்கபட்ட பிரிந்த குமாரவின் மரணம் முழு உலகத்திற்கும் கடந்த வாரம் கிடைத்த அதிச்சியான அவமானமான ஒரு செய்தியாகும். இந்த பிரியந்தவின் பல சகோதரர்கள் பாகிஸ்தானில் தான் தொழில் செய்து வருகின்றார்கள். தனது காரியாலயத்தில் ஒட்டப்பட்ட ஒரு போஸ்டரை பிரியந்த அகற்றி இருக்கின்றார். பின்னர் ஊழியர்கள் கொதித்த போது தனக்கு அதில் இருந்த வார்த்தைகள் புரியமல் நடந்த தவறு என்று அவர் தவறை ஏற்றும் மன்னிப்பும் கேட்டு இருக்கின்றார். அதன் பின்னரும் அவர் அநாகரிகமான முறையில் உயிருடன் தீயில் போட்டு எரிக்கபட்டிருக்கின்றார். இன்று அது பற்றி முழு உலகுமே பேசிக்க கொண்டிருக்கின்றது. ஆனால் நமது நாட்டில் மனிதர்களை உயிருடன் எரிக்கின்ற கலாச்சாரத்துக்கும் நீண்ட வாரலாறுகள் இருக்கின்றன என்பதனையும் இங்கு சொல்லித்தான் ஆக வேண்டும்.

ஆளும் தரப்பு சபாநாயகர்!

நமது பாராளுமன்றத்தில் தற்போதய சபாநாயகர் செயல்படுகின்ற ஒழுங்கைப் பார்க்கின்ற போது அவர் நமது பாராளுமன்த்தின் சபாநாயகர் என்று சொல்வதை விட ஆளும் தரப்பு அதாவது மொட்டுத் தரப்பு சபாநாயகர் என்றுதான் நாம் அவரை அடையாலப்படுத்த வேண்டும். இன்று நமது பாராளுமன்றம் ஒரு கேலிக் கூத்தாகி இருக்கின்றது. இதிலிருந்த நமது நாடாளுமன்றத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் முதலில் அதன் மீதான நல்லலெண்ணத்தை உண்டு பண்ண வேண்டும். எனவே முதலில் நமது சபாநாயகர் தனது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். அவர் ஆளும் தரப்பை தொடர்ந்து திருப்திப்படுத்த முற்பட்டால் நாடாளுமன்றம் கோமாளிகள் கூடாரமாக மாறி விடும். தற்போதுகூட அதன் நிலை அப்படித்தான் இருக்கின்றது. இது ஜேவிபி தலைவர் அணுரகுமாரவின் ஆதங்கம்.

-நன்றி ஞாயிறு தினக்குரல்

Previous Story

முஸ்லிம் என்பதால் விரட்டப்பட்டேன்.-ஜாகீர் உசேன்

Next Story

காஷ்மீர் கொலைகள்: நீதி கேட்டும்  உறவுகள்