பேராசிரியர் தவளையான கதை! 

நஜீப்

சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு பாடம் கற்றுக் கொடுத்தவர்தான் போரசிரியர் ஜீ.எல் பீரிஸ். மொட்டுக் கட்சியின் தலைவர் பதவி வகித்து குறுகிய காலத்துக்குள் அந்தக் கட்சியை உச்ச அரசியல் கதிரையில் கொண்டு வந்து இருத்தியதில் அவருக்கு பாரிய பங்கு.

இப்போது ராஜபக்ஸாக்களுடன் முரண்பட்டு நிற்கும் அவர் ஆளும் தரப்பிலிருந்து வெளியேறி டலஸ் தரப்புடன் இணைந்து அரசியல் செய்து கொண்டிருக்கின்றார். இதனால் கோபமடைந்த மொட்டுக் கட்சியினர் அவர் கட்சியில் வகித்த தலைமை பதவியில் இருந்து வெளியேற்றி இருப்பதாகக் கூறுகின்றார்கள்.

ஆனால் பேராசிரியரோ தனக்கு அப்படி ஒரு கடிதமே இதுவரை கிடைக்கவில்லை என்று கூறுகின்றார். ஏன் இன்னும் ஜீ.எல்.க்கு பதவி வெளியேற்றம் பற்றிய கடிதத்தை கையளிக்கவில்லை என்று கேட்ட போது, இது தொழிநுட்ப காலம்.

அப்படிக் கடிதம் கொடுக்கத் தேவையில்லை என்று கூறும் மொட்டுக் கட்சி எஸ்.எம். சுந்திரசேன ஜீ.எல். ஒரு தவளை அரசியல்வாதி என்றும் நையாண்டி பண்ணுகின்றார். எனவே பேராசிரியரை கட்சியிலிருந்து தூக்குவதில் சட்டச் சிக்கல் என்றுதான் தெரிகின்றது.

நன்றி: 12.03.2023 ஞாயிறு தினக்குரல்

Previous Story

ஒரே நாளில் தங்கத்தின் சடுதியான அதிகரிப்பு! வெளியான புதிய தகவல்

Next Story

இலங்கையில் அதானியும், மோடியும் செய்யும்  அடாவடிகள் - காங்கிரஸ் குற்றச்சாட்டு