ரூ.170.72 கோடி வென்ற இந்திய டிரைவர்

ஐக்கிய அமீரகத்தில் நடந்த லாட்டரி நிகழ்வில் இந்தியாவைச் சேர்ந்த டிரைவர் ஒருவருக்கு ரூ. 170.72 கோடி மெகா ஜாக்பாட் கிடைத்துள்ளது. இந்தியாவில் இருந்து பலரும் மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று பணிபுரிந்து வருகின்றனர். குறிப்பாக ஐக்கிய அமீரகத்திற்குச் செல்லும் இந்தியர்கள், அங்கே பல ஆண்டுகள் பணிபுரிகிறார்கள்.

Dubai-based Indian driver wins lottery worth Rs 33 crore - India Today

ஜாக்பாட்

அப்படி ஐக்கிய அமீரகத்தில் உள்ள அல் ஐன் என்ற இடத்தில் பணிபுரியும் இந்தியாவைச் சேர்ந்த ஒரு டிரைவர் ஒருவருக்கு மெகா ஜாக்பாட் கிடைத்துள்ளது.

கடந்த டிசம்பர் 31ஆம் தேதி நடந்த பிக் டிக்கெட் லைவ் டிராவில் அவருக்கு 20 மில்லியன் திர்ஹம் கிடைத்துள்ளது. இது (sri lanka) ரூ. 170.72 கோடியாகும். சீரிஸ் 259 பிக் டிக்கெட் லைவ் டிராவில் வென்ற இந்த இந்தியரின் முனவர் ஃபேரூஸ். அங்கே டிரைவராக பணிபுரிந்து வந்த ஃபோரூஸுக்கு அதில் வந்த வருமானம் போதவில்லை.

இதனால் வேறு எப்படியாவது கூடுதலாகச் சம்பாதிக்க வேண்டும் என அவர் யோசித்துள்ளார். இதற்காகவே அவர் லாட்டரியை வாங்கத் தொடங்கியுள்ளார். இதற்காகக் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் ஃபைரூஸ் லாட்டரியை வாங்கியுள்ளார். இருப்பினும், இத்தனை காலத்தில் அவருக்குப் பெரிதாக எந்தவொரு பரிசும் கிடைத்தது இல்லை.

Dubai Lottery Winner: Indian Driver Ajay Ogula in UAE Wins Over Rs 33 Crore in Easy6 Emirates Draw | 🌎 LatestLY

ரூ.170.72 கோடி:

இந்த சூழலில் தான் அவருக்கு SRI LANKA மதிப்பில் கோடி மெகா ஜாக்பாட் கிடைத்துள்ளது. அதேநேரம் இந்த பணத்தை அவர் மட்டும் வைத்துக் கொள்ளவில்லை. லாட்டரி டிக்கெட் வாங்க தனக்கு உதவிய 30 பேருக்கு இந்த பரிசுத் தொகையை அவர் பகிர்ந்து கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “இப்படியொரு விஷயம் நடக்கும் என நான் துளியும் எதிர்பார்க்கவில்லை. இன்னும் நான் அதிர்ச்சியில் தான் இருக்கிறேன்.

அடுத்து நான் என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க எனக்குக் கொஞ்ச நேரம் தேவைப்படுகிறது. இனிமேல் நான் எப்போதும் பணத்திற்குப் பின்னால் ஓட தேவைப்படாது” என்றார். ஃபேரூஸைத் தவிர, இந்திய, பாலஸ்தீனிய, லெபனான் மற்றும் சவூதி அரேபிய நாடுகளைச் சேர்ந்த 10 பேருக்கு 100,000 திர்ஹம்கள் மதிப்புள்ள ரொக்கம் லாட்டரி பரிசாகக் கிடைத்துள்ளது.

Previous Story

ஈரானுக்கு எதிராக இலங்கை கடற்படை!

Next Story

ஏன் இந்த வஞ்சனை அரசியல்!