நஜீப்
நன்றி 14.12.2025 ஞாயிறு தினக்குரல்
எதிரணிகள் எந்த ஒரு விடயத்தை வைத்துக் கொண்டும் அரசுக்கு எதிரான ஒரு பரப்புரையை செய்வதில்தான் முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டு வருகின்றது. ஆனால் ஆக்கத்திலும் அழிவிலும் ஜனாதிபதி அனுர பக்கம்தான் காற்றுப் பலமாக வீசிக் கொண்டிருக்கின்றது.
எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக மேற்கொண்ட இப்படியான எந்த ஒரு இசுவும்-விமர்சனமும் இதுவரை வெற்றி பெற்றதாகத் தெரியவில்லை. இதனால் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் சமூகத்தின் மத்தியில் கோமாளிகளாகி வருகின்றார்கள்.
பேரழிவுக்குப் பின்னரான ஒரு கருத்துக் கணிப்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் இமேஜ் குறிப்பிடத்தக்க அளவு மக்கள் மத்தியில் அதிகரித்திருக்கின்றது.
பாதிக்கப்பட்ட மக்கள் அவரை தமது மீட்பாளராக நம்புகின்றார்கள். பேரழிவுக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதிகள் பற்றிய நல்லெண்ணத்தில் ஜனாதிபதி சந்திரிக்க இந்த நாட்களில் குடிமக்கள் மனங்களில் உச்சியில் நிற்கின்றார். அவரும் அரசைத்தான் சிறந்த மீட்பாளராக நம்புகின்றார்.





