2 மாசம்தான் டைம்.. உடனே எங்க நாட்டில் இருந்து வெளியேறுங்க..”

இந்திய வீரர்கள் மாலத்தீவில் இருக்கும் நிலையில், அவர்கள் மார்ச் 15ஆம் தேதிக்குள் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று மாலத்தீவு அரசு கெடு விதித்துள்ளது. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே மோதல் நிலவி வருகிறது. பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் கூறிய சில சர்ச்சை கருத்துகளே இந்த மோதலுக்குக் காரணமாகும்.

China, Maldives upgrade ties with infrastructure deals in pivot from India | News | Al Jazeera

இந்த விவகாரத்தையடுத்து மாலத்தீவை புறக்கணிக்க வேண்டும் என்று கூட இந்தியாவில் குரல்கள் எழுந்தன. இதற்கிடையே இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் இப்போது மேலும் சிக்கலானதாக மாறியிருக்கிறது. கெடு விதித்த மாலத்தீவு அரசு: வரும் மார்ச் 15ஆம் தேதிக்குள் இந்திய அரசு மாலத்தீவில் உள்ள தனது ராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்று மாலத்தீவு அதிபர் மொஹமட் முய்ஸு கேட்டுக் கொண்டுள்ளார்.

கடந்த சில நாட்களாகவே இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மோசமாகப் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மாலத்தீவு அதிபர் தரப்பில் இந்த வேண்டுகோளைப் பிறப்பித்துள்ளனர். கடந்தாண்டு நடந்த மாலத்தீவு தேர்தல் பிரசாரத்தின் போதே முய்ஸு, இந்தியாவுடனான உறவுகளைக் குறைப்பேன் என்றும் சீனாவுடனான உறவை மேம்படுத்துவேன் என்றும் கூறியிருந்தார்.

India-Maldives Row: Maldives President Mohamed Muizzu First Lady visit China | Hindustan Times

அப்போதே அவர் மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவத்தையும் வெளியேற்றுவேன் என்பதை முன்வைத்து இந்தியா அவுட் என் பிரச்சாரத்தை முன்னெடுத்து இருந்தார். தொடர்ந்து அதிபராகத் தேர்வான பிறகு அவர் கடந்த நவ. மாதம் இந்தியா தனது வீரர்களைத் திரும்பப் பெற வேண்டும் என்று அதிகாரப்பூர்வமாகக் கோரிக்கை விடுத்தார்.

Maldives President Mohamed Muizzu Meets China's Xi Jinping Amid Row With India

இது குறித்து மாலத்தீவு அதிபரின் செயலாளர் அப்துல்லா நஜிம் இப்ராஹிம் கூறுகையில், “இந்திய ராணுவ வீரர்கள் மாலத்தீவில் தங்க முடியாது. இது அதிபர் டாக்டர் முகமது முய்சுவின் கொள்கை முடிவு” என்று தெரிவித்தார். கடந்த வாரம் தான் மாலத்தீவு அதிபர் முய்ஸு சீனாவுக்குச் சென்று திரும்பிய நிலையில், இப்போது இந்த உத்தரவு வந்துள்ளது. மாலத்தீவில் சுமார் 88 இந்திய ராணுவ வீரர்கள் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தனை பேரையும் அங்கிருந்து வெளியேற்ற மாலத்தீவு அரசு உத்தரவிட்டுள்ளது.

குட்டி நாடாக இருக்கலாம்.. ‘அதுக்காக’…

பிரதமர் மோடி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த பரபரப்புக்கு இடையே மாலத்தீவுக்கு ஐந்து நாள் பயணமாக சீனா சென்றார். சீனாவில் இருந்து மாலத்தீவு திரும்பியதும் அவர் வெளியிட்ட அறிக்கை கவனம் பெற்றுள்ளது. இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு மாலத்தீவு..

பல்வேறு தீவுக்கூட்டங்களை உள்ளடக்கிய மாலத்தீவு நாடு சுற்றுலாப் பயணிகளின் சொர்க்க பூமியாக விளங்கியது. மாலத்தீவில் மொத்த மக்கள் தொகையே 5.21 லட்சம் தான். புவிசார் அரசியலில் இந்தியாவுக்கு முக்கிய நாடாக இருக்கிறது. இந்தியாவுக்கு நெருக்கமான நாடாக இருந்த மாலத்தீவு, கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற ஆட்சி மாற்றத்திற்கு பிறகு நிலமை அப்படியே மாறிப்போனது.

சீனாவுடன் அதிகம் நெருக்க காட்ட ஆரம்பித்தார் புதிதாக பதவியேற்ற அதிபர் முகம்மது முய்சு.. இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணத்தை மாலத்தீவு அமைச்சர்கள் சிலர் விமர்சித்தத்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிரதமர் மோடிக்கு எதிராக இழிவான கருத்துக்களை கூறியது விமர்சனத்திற்கு உள்ளானது.

மாலத்தீவு அமைச்சர்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்தியர்கள் பலரும் அந்த நாட்டிற்கு செல்ல இருந்த பயணத்தை ரத்து செய்தனர். சுற்றுலாத்துறையை பெரிதும் நம்பியிருக்கும் மாலத்தீவு இதனால், அதிர்ந்து போனது. இந்தியாவும் மாலத்தீவு தூதருக்கு சம்மன் அனுப்பி விளக்கம் கேட்டது. மாலத்தீவு எதிர்க்கட்சிகளும் கடுமையான நெருக்கடியை அரசுக்கு கொடுத்ததன.

இதனால், வேறு வழியின்றி பணிந்து போன மாலத்தீவு அரசு, சம்ந்தபட்ட அமைச்சர்களை நீக்கியதோடு, அது அவர்களின் தனிப்பட்ட கருத்தும் என்றும் விளக்கம் அளித்தது. இந்த சர்ச்சைகளுக்கு இடையே சீனாவுக்கும் மாலத்தீவு அதிபர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். மாலத்தீவு விவகாரம்.. இதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது..

இந்தியாவை சீண்டும் சீனா?

தங்கள் நாட்டிற்கு அதிக சுற்றுலாப்பயணிகள் வருவதை சீனா ஊக்குவிக்க வேண்டும் என்று அந்த நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங்கிடம் மாலத்தீவு அதிபர் கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக முய்சு கூறுகையில், ” கொரோனாவுக்கு முன்பாக சீனாதான் எங்கள் சுற்றுலாத்துறையில் அதிக பங்களிப்பை அளித்தது. எனவே அதே நிலையை திரும்ப கொண்டு வர தீவிர முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்துகிறேன்” என்று கூறியிருந்தார்.

சீனாவிற்கு ஐந்து நாள் பயணமாக சென்ற மாலத்தீவு அதிபர் முகம்மது முய்சு தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து மாலத்தீவு திரும்பினார். அதன்பிறகு மாலத்தீவு அதிபர் வெளியிட்ட அறிக்கையில், நாங்கள் அளவில் சிறிய நாடாக இருக்கலாம். அதற்காக எந்த ஒரு நாட்டிற்கும் எங்களை கொடுமைப்படுத்தும் உரிமை கிடையாது என்று கூறியுள்ளார்.

பிரதமர் மோடி குறித்த விமர்சனத்தால் இந்தியா – மாலத்தீவு இடையேயான உறவில் சலசலப்பு ஏற்பட்டு இருக்கும் நிலையில், மாலத்தீவு அதிபரின் இந்த பேச்சு பெரும் கவனம் பெற்றுள்ளது.

Previous Story

அயோத்தியில் மசூதி கட்ட நிலம் ஒதுக்கியும் பணி துவங்காதது ஏன்?

Next Story

"தமிழரசுக் கட்சி: கிழக்கிற்கு செயலாளர் பதவி வேண்டும்"