19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி

துபையில் நடைபெற்று வரும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய இறுதிப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 347 ரன்கள் எடுத்திருந்தது.

இந்தியா, பாகிஸ்தான்
வைபவ் சூர்யவன்ஷி 10 பந்துகளில் 26 ரன்கள் எடுத்தார்

348 ரன்கள் இலக்கை துரத்தி ஆடிய இந்திய அணி 26.2 ஓவர்களில் 156 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.

Picture courtesy PCB website

10 பந்துகளில் 26 ரன்கள் எடுத்த வைபவ் சூர்யவன்ஷி விரைவான தொடக்கம் வழங்கினாலும் 68 ரன்களுக்குள் இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்தது. 6 பேட்ஸ்மேன்கள் ஒற்றை இலக்க ரன்களிலே ஆட்டமிழந்தனர்.

இந்திய அணிக்காக தீபேஷ் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்திருந்தார். பாகிஸ்தான் தரப்பில் அலி ரஸா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Previous Story

குரல் தரும் குறுஞ்செய்திகள்!

Next Story

செங்கிஸ் கான் இந்தியாவை கைப்பற்றாதது ஏன்?