பெண்ணின் தலையில் சிசிடிவி மாட்டிய தந்தை.. தெருவெல்லாம் கேமராவுடன் திரியும் மகள்.. காரணம் தெரியுமா?

பாகிஸ்தானில், பெற்ற மகளுக்காக தந்தை செய்த காரியம் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை பார்த்த இணையவாசிகள் ஏராளமான கமெண்ட்களை பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள். சமீபகாலமாகவே பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது.

அதிலும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புகள் குறைந்து கொண்டே வருவதுடன், பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்களும் அதிகரித்தபடியே உள்ளன.

daughter father cctv camera pakistan

பெண் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே சென்றால், அவர்கள் வீடு திரும்பும்வரை பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டு இருக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது. சில கல்வி நிறுவனங்களிலேயே பாதுகாப்பு இல்லாதபோது, மிகப்பெரிய கலக்கம் பெற்றோர்களை சூழ்ந்து வருகிறது.

பாகிஸ்தானில் ஒரு அப்பா, தன்னுடைய மகளுக்காக செய்துள்ள காரியம்தான், வியப்பை தந்து வருகிறது.. தன்னுடைய செல்ல மகள், எங்கு சென்றாலும் அதை கண்காணிப்பதற்காகவே, மகளின் தலையில் ஒரு சிசிடிவி கேமராவை பொருத்தியிருக்கிறாராம்..

கேமரா: இந்த கேமராவை எங்கிருந்து வேண்டுமானாலும் தன்னுடைய செல்போன் மூலமாக 24 மணி நேரமும் கண்காணிக்க முடியும். இப்போதெல்லாம் அந்த பெண், பாகிஸ்தானின் தெருக்களில் எங்கு போனாலும், தலையில் கேமராவுடன்தான் நடமாடி வருகிறாராம்..

இதை அம் மக்களே ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். இந்த விஷயம் மீடியா வரைக்கும் சென்று, செய்தியாளர் ஒருவர் அந்த பெண்ணை பேட்டி எடுத்துள்ளர்.. இப்படி தலை மேலே, கேமராவை மாட்டியிருப்பது உங்களுக்கு அசௌகரியமாக இல்லையா? என்று செய்தியாளர் கேட்டிருக்கிறார்.

அதற்கு அந்த பெண், “இந்த கேமராவுக்கான அக்ஸஸுடன் வீட்டிலிருந்தபடியே,, நான் எங்கெல்லாம் செல்கிறேன் என்ன செய்கிறேன் என்பதை என் அப்பா கண்காணித்து வருகிறார்..

ஆட்சேபம்: என்னுடைய அப்பா எது செய்தாலும், அது என்னுடைய நல்லதுக்குதான் செய்வார்.. அதனால் என்னுடைய அப்பாவின் முடிவுக்கு நான் ஆட்சேபம் தெரிவிக்கவில்லை என்றார். மகளின் பாதுகாப்புக்காக தந்தை இவ்வாறு செய்தாலும், இந்த செயல்பாடு சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

பெண் அளித்த இந்த பேட்டிதான், இணையத்தில் வீடியோவாக வைரலாகி கொண்டிருக்கிறது. அதுவும் தலைமேல் சிசிடிவி கேமராவுடன்….!!

Previous Story

Next Story

மாவனெல்ல சஜித் கூட்டத்தில் குழப்பம்