பிசுபிசுத்த சுமந்திரன் தீர்மானம்

Sumanthiran thanks President for prioritising Northern development projects | Daily FT

சுமந்திரன் வன்னியில் கூடி சஜித் பிரேமதாவை ஆதரிப்பதாக கொடுத்த அறிவிப்பு சஜித் ஆதரவாலர்களுக்கு பெரும் மகிழ்வான செய்தியாக இருந்தாலும் அந்த அறிவிப்பு வந்த சில மணி நேரங்களுக்குள்ளேயே அதற்கு எதிரான குரல்கள் தமிழர்கள் மத்தியல் எழுந்தது.

தமிழரசுக் கட்சித் தலைவர் சிரிதரன் சுமந்திரன் அறிவிப்பும் கூட்டமும் சட்டத்துக்கு முரணனது என்று கூறி இருந்தார். நிருவாக சபையில் பெரும்பாலானவர்கள் அந்தக் கூட்டத்தில் இருக்கவில்லை.

இதனால் சஜித்தை ஆதரிப்பதான சுமாந்திரன் அறிவிப்பு அரசியல் டீல் சம்பந்தப்பட்ட விடயம் அதன் பின்னணயில் தேசிய பட்டியலும் அமைச்சர் பதவியில் இருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது.

இதன் உண்மைத் தன்மைகள் பற்றி நமக்குத் தெரியாது. தமிழரசுக் கட்சியில் பெரும்பாலானர்களும் தமிழ் மக்களும் பொது வேட்பாளர் அரியநேந்திரனுக்கு ஆதரவாகத்தான் இருப்பதாகத் தெரிகின்றது.

நன்றி 08.09.2024 ஞாயிறு தினக்குரல்

மரிக்கார்-ரணில் இரகசிய டீல்

LEN - www.lankaenews.com | SJB MP Marikkar Accused of Betraying His Party for Personal Gains.!

கடந்த வார அரசியல் நிகழ்வுகளில் மிகவும் பேசப்பட்ட மனிதன் மரிக்கார். பொது மேடைகளில் ஜனாதிபதி ரணிலை மிகவும் ஏளனமாகவும் கேவலமாகவும் பேசுகின்றவர் சஜித் அணி முக்கியஸ்தர் மரிக்கார். இவர் மிகவும் இரகசியமாக ரணிலைச் சந்தித்து தனக்கு சில வசதிகளையும் வாகனப் போர்மிட்டையும் வழங்குமாறு ஜனாதிபதி ரணிலிடம் கேட்டிருக்கின்றார்.

அத்துடன் அணுரவுக்கும் ஜேவிப்பிக்கும் எதிராக அவர் ரணிலுடன் இணைந்து சில சேறுபூசுகின்ற காரியங்களையும் மேற்கொள்ளும் முயற்சிகளிலும் இறங்கி இருந்தார் என்பது ஒரு வீடியோப் பதிவில் சிக்கியது.  இது பழைய கதை என்று மரிக்கார் அதற்கு நியாயம் சொல்ல  முயன்றாலும்,

அது அவர் ரணில் பற்றி மேடைகளில் விமர்சித்துக் கொண்டிருந்த அண்மைய நாட்கள் என்பது தெரிய வருகின்றது. இது ரணிலின் வெற்றி வாய்ப்பில் கடும் தாக்கங்களை ஏற்படுத்தலாம்.

மரிக்காரின் இந்த செயல்பாடுகள் சிங்கள மக்கள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. ஐமச.க்குள் கடும் எதிர்ப்புக் கிழம்பி இருக்கின்றது. இதனால் சிலர் ‘தம்பியாகே தொப்பி’ என்று கூட இதனை விமர்சிக்கின்றாhகள்.

நன்றி 08.09.2024 ஞாயிறு தினக்குரல்

அணுர மீது முஸ்லிம்கள் ஈர்ப்பு

Anura Kumara Dissanayake on LinkedIn: Honored to join a meeting with the Muslim community in Matara held…

வரலாற்றில் இப்படியும் மக்கள் மனங்களில் மாற்றங்கள் வருமா என்று யோசிக்கும் அளவில் சில மாற்றங்கள் நடப்பதுண்டு. அதற்கு நல்ல உதாரணம்தான் ராஜபக்ஸாக்கள். குறிப்பாக கோதாபேயின் எழுர்ச்சியும் வீழ்சியும்.

இது இறைவனின் பார்த்த செயல் என்றும் பரவலான ஒரு நம்பிக்கை மக்களிடத்தில் காணப்படுகின்றது. அது போலத்தான் இன்று குறிப்பாக இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்களின் மனங்களில் அணுர  மீதான ஈப்பும் அமைந்திருக்கின்றது.

Only national unity could ensure national security - Anura Dissanayake

அங்கு அண்களும் பெண்களும் அணுராவுக்கு ஆதரவுக்காக களத்தில் இறங்கி பணியாற்றி வருகினார்கள். இது முஸ்லிம் சமூகத்தில் தனித்துவ அரசியல் செய்கின்ற தலைவர்களுக்குப்  பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருகின்றது. அத்துடன் ஐ.ம.ச.வேட்பாளர் சஜித்துக்கும் இது கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.

Anura Kumara Dissanayake on X: "Yesterday (26th), I attended the 'Muslim Brotherhood Meeting' held at The Taprobane Entertainment Hall in Colombo. Your presence and support for the 2024 presidential election, which will

இதனால் அவர்கள் அணுராவை இலக்கு வைத்து மேடைமகளில் பேசி வருகின்றனர். அப்படி பேசிய சில கருத்துக்கள் குறிப்பாக மு.கா. தலைவர் ஹக்கீம் வெளியிட்ட ஒரு கருத்துத் தொடர்பாக அணுர தரப்பினர் தற்போது சட்ட நடவடிக்கை வரை பேய் இருக்கின்றார்கள்.

நன்றி 08.09.2024 ஞாயிறு தினக்குரல்

வெளிநாடுகளுக்கு ரணில் உணவு!

Sri Lanka: Ranil Wickremesinghe elected president by MPs

நமது ஜனாதிபதி எங்கு போய் பேசினாலும் அதிரடியான அறிவிப்புக்களை சொல்வது வழக்கம். இப்படி அவர் கடந்த காலங்களில் நிறையவே வாக்குறுதிகளை சொல்லி இருக்கின்றார். அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு உணவு ஏற்றமதி செய்யும் திட்டமொன்று பற்றிப் அவர் பேசி இருந்தார்.

கடவுளே நாட்டில் இப்படியும் ஓர் முன்னேற்றமா? அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் தொழிலாளர்களுக்கு 25000 ரூபா சம்பள அதிகரிப்பு என்று அவர் கூற சஜித் தானும் 27500 ரூபா என்று அறிவித்திருக்கின்றார். மேலும் வருகின்ற தேர்தலில் அணுராவை  சஜித்தால் தோற்கடிக்க முடியாது என்று பகிரங்கமாக ஜனாதிபதி ரணில் சவால் விடுத்து வருகின்றார்.

அதே நேரம் இந்தத் தேர்தலில் தன்னால் அணுராவைத் தோற்கடிக்க முடியுமா என்று ரணில் இதுவரை பகிரங்கமாக எங்கும் கூறவில்லை. எதிரியின் எதிரி நண்பன் என்ற வார்த்தையை ரணில் மீண்டும் உறுதி செய்கின்றார் போலும். எனவே வாக்காளர்கள்தான் இதற்கான பதிலை 21ம் திகதி வழங்க வேண்டும்.

நன்றி 08.09.2024 ஞாயிறு தினக்குரல்

நாமல் நிலை கவலைக்கிடம்!

The tragedy of being Namal Rajapaksa - CounterPoint

ஜனாதிபதி தேர்தல் போட்டியில் கடந்த தேர்தலில் அறுபத்து ஒன்பது இலட்சம் வாக்களைப் பெற்ற மொட்டு தரப்பு வேட்பாளராக இந்த முறை களமிறங்கி இருக்கின்ற ராஜபக்ஸாக்களின் அரசியல் வாரிசு நாமல் ராஜபக்ஸ மிகவும் பின் தங்கிய நிலையில் இருக்கின்றார்.

இறுதியாக நடந்த பொதுத் தேர்தலில் இரண்டு இலட்சம் வாக்குகளைப் பெற்ற ஜனாதிபதி ரணில் இப்போது நாமலை பின்னுக்குத் தள்ளி முன்னேறிக் கொண்டிருக்கின்றார். ஆனாலும் பிரதான போட்டியாளர்களை வீழ்த்துவதானால் ஜனாதிபதி ரணில் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும்.

அத்துடன் மொட்டுக் கட்சியில் இருந்து ரணிலிடம் போனவர்களுக்கும், ஐக்கிய தேசிக் கட்சியினருக்கும் லடாய் என்று தகவல். காசை வாங்கிக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியினர் ரணிலுக்கு வேலை செய்யப் பின்னடிக்கின்றார்கள் என்று மஹிந்தானந்த குற்றம் சாட்டுகின்றார்.

இது பற்றித் தேடிப்பார்க்க ஒருவரை இப்போது ரணில் நியமனம் செய்திருக்கின்றாராம்.

நன்றி 08.09.2024 ஞாயிறு தினக்குரல்

Previous Story

காலிக் கூட்டம் சஜித் அதிருப்தி

Next Story

பெண்ணின் தலையில் சிசிடிவி மாட்டிய தந்தை.. தெருவெல்லாம் கேமராவுடன் திரியும் மகள்.. காரணம் தெரியுமா?