“107 நாட்கள் ஆச்சு..”

3 பெண்களை வைத்து ஹமாஸ் வெளியிட்ட புது வீடியோ.. பகீர் தகவல்!

இஸ்ரேல் ஹமாஸ் போர் தொடர்பாகச் சர்வதேச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் ஹமாஸ் இப்போது புதிய வீடியோ ஒன்றைப் பகிர்ந்துள்ளது. இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த அக். 7ஆம் தேதி முதல் போர் தொடர்ந்து வருகிறது. முதலில் இஸ்ரேல் நாட்டில் புகுந்த ஹமாஸ் படை தாறுமாறாகத் தாக்குதல் நடத்தியது.

கண்ணில் பட்ட அனைவரையும் சுட்டுத் தள்ளியது. மேலும், பலரையும் பணைய கைதிகளாகப் பிடித்துச் சென்றது. 6 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு அதன் பிறகு பதிலடியில் இறங்கிய இஸ்ரேல், ஹமாஸ் மீது சரமாரியாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

காசா மீது ஏவுகணை தாக்குதல் மட்டுமின்றி முழு வீச்சில் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இந்த தாக்குதல் பல மாதங்களாகத் தொடர்ந்து வருகிறது. புது வீடியோ: இதற்கிடையே காசா பகுதியில் பாலஸ்தீனர்கள் கட்டுப்பாட்டில் உள்ள மூன்று இஸ்ரேல் பெண்கள் குறித்த வீடியோவை ஹமாஸ் இப்போது வெளியிட்டுள்ளது.

மொத்தம் ஐந்து நிமிடம் ஓடும் அந்த வீடியோவில் வரும் பெண்களில் இருவர் தாங்கள் இஸ்ரேல் ராணுவ வீரர்கள் என்றும், மூன்றாவது பெண் இஸ்ரேல் நாட்டை சேர்ந்த குடிமகன் என்றும் கூறுகின்றனர்.. இவர்கள் இஸ்ரேல் நாட்டை சேர்ந்தவர்கள் தான் என்பதைச் சர்வதேச ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. அந்த வீடியோவில் கடந்த 107 நாட்களாக ஹமாஸ் காவலில் இருப்பதாக அந்த பெண்கள் கூறுகின்றனர்.

இதன் மூலம் அந்த வீடியோ கடந்த ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது. காசாவில் நடக்கும் இனப் படுகொலையைத் தடுக்க இஸ்ரேல் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டும் என்று ஐ.நா.வின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய சிறிது நேரத்திலேயே இந்த வீடியோ வெளியாகியுள்ளது.

 சர்வதேச நீதிமன்றம்

மேலும், அக்டோபர் 7ஆம் தேதி தாக்குதலின் போது கடத்தப்பட்ட பணய கைதிகளை உடனடியாகவும் எந்தவொரு நிபந்தனையும் இல்லாமல் ஹமாஸ் விடுவிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. கடந்த அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் இதுவரை இல்லாத வகையில் திடீரென மோசமான தாக்குதலை நடத்தியது.

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேலில் சுமார் 1,140 பேர் கொல்லப்பட்டனர், அவர்களில் பெரும்பாலோர் பொதுமக்கள் தான். இஸ்ரேல் நாட்டில் புகுந்த ஹமாஸ் படை சரமாரியாகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மேலும், சுமார் 250 பேரை பணய கைதிகளாகவும் ஹமாஸ் பிடித்துச் சென்றனர். அவர்களில் 132 பேர் இன்னுமே காசாவில் தான் இருப்பதாக இஸ்ரேல் கூறுகிறது, மேலும், பணையக் கைதிகளில் குறைந்தது 28 உயிரிழந்துவிட்டதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.

போர் நிறுத்தம்

இடையில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு வாரத்திற்கு மேலாகப் போர் நிறுத்தம் இருந்தது. அப்போது ஹமாஸ் வசம் இருந்த பல பணையக் கைதிகள் விடுவிக்கப்பட்டன. இந்த போர் நிறுத்தம் ஓரிரு முறை நீட்டிக்கப்பட்டது. அப்போது ஹமாஸ் கூடுதலாகப் பணைய கைதிகளை விடுவித்தனர்.

இருப்பினும், அதன் பிறகு போர் நிறுத்தம் ஏற்படாத நிலையில், பணைய கைதிகளும் விடுவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஹமாஸ் படையை முழுமையாக அழிக்கும் வரை நிறுத்தப் போவது இல்லை என்று இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

Previous Story

நூறு பா.உ. க்கு ஒரு அணுரா!

Next Story

தாய்மை வலியை வென்ற ரணில்!