நஜீப்
நன்றி 14.12.2025 ஞாயிறு தினக்குரல்
முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரும் போல இப்போது வயது முதிர்வு காரணமாக நோய் நிலையில்தான் இருந்து வருகின்றார்கள். குறிப்பாக சந்திரிகா மஹிந்த ரணில் போன்றவர்கள் நிலை மோசம்.! சரீரம் மருந்தில்தான் ஓடுகின்றது.
இவர்களில் சிலரிடம் மக்களிடத்தில் கோடிக்கணக்கில் கொள்ளையடித்த காசுகள் இருக்கின்றது என்று சொல்லப்படுகின்றது. ஆனால் அவர்களில் எவரும் இதற்கு உதவும் மன நிலையில் இல்லை. அவர்கள் அரசின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்துக் கொண்டு வருகின்றார்கள்.
இந்த நிலையில் அவர்களின் கண்ணத்தில் சாத்தியது போல அல்லது தேன் கூட்டுக்கு கால் வீசியது போல சந்திரிக்க பண்டாரநாயக்க குமாரணதுங்ஹ தனது தந்தை நிதியத்தில் இருந்து இருபத்தி ஐந்து கோடி (25) ரூபாய்களை அரசின் பேரிடர் நிதியத்துக்கு அன்பளிப்புச் செய்திருக்கின்றார்.
இதனால் முன்னாள் தலைவர்கள் பலருக்கு இப்போது சமூகத்தில் பெரும் நெருக்கடி நிலை தோன்றி இருக்கின்றது. அவர்கள் மூக்குடைபட சந்திரிக்கா ஹீரேவாகி இருக்கின்றார்.



