வெறும் 48 மணி நேரத்தில் எந்தவொரு கேன்சருக்கும் தடுப்பூசி!

ஏஐ துறை இப்போது அதிவேகமாக வளர்ந்து வரும் சூழலில், வரும் காலங்களில் வேக்சினை தயாரிக்கவும் கூட ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடியும் என்று ஆரக்கிள் தலைவர் லாரி எலிசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

A vial labeled “mRNA vaccine” and a syringe on a blue background.

இதன் மூலம் கேன்சர் பாதிப்பை கண்டறிந்து வெறும் 48 மணி நேரத்தில் அதற்கான வேக்சினையும் கூட தயாரிக்க முடியும் என்று லாரி எலிசன் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம். இந்தக் காலத்தில் ஏஐ தான் உலகில் அதிவேகமான வளர்ந்து வருகிறது.

நாம் நினைத்து கூட பார்க்காத வேகத்தில் யோசிக்காத துறைகளில் கூட ஏஐ வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது.

செயற்கை நுண்ணறிவு: இது ஒரு பக்கம் இருக்க மருத்துவ துறையில் ஏஐ பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் மிக பெரியளவில் மனித உயிர்களை காப்பாற்ற முடியும் என்று பலரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதற்கிடையே செயற்கை நுண்ணறிவு மூலம் கேன்சருக்கான மருந்தை கூட உருவாக்க முடியும் என ஆரக்கிள் தலைவர் லாரி எலிசன் கூறியிருக்கிறார்.

என்ன தான் நாம் பொதுவாக கேன்சர் என சொன்னாலும் கூட கேன்சரில் பல நூறு வகைகள் உள்ளன. இதனால் தான் சில கேன்சருக்கு மருந்து உள்ளது. பல கேன்சருக்கு குணப்படுத்தும் சிகிச்சை இல்லை. ஆனால், ஏஐ மூலம் நாம் கேன்சர் செல்களை படித்து அதற்கு என்ன வேக்சின் சரிவரும் என்பதை கண்டறிந்து, வெறும் 48 மணி நேரத்தில் தடுப்பூசியை உருவாக்க முடியும் என்பதே லாரி எலிசனின் கருத்தாக உள்ளது.

China greenlights new mRNA vaccine targeting tumors

48 மணி நேரத்தில் தடுப்பூசி: வெள்ளை மாளிகையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய எலிசன், “ஏஐ துறை இப்போது மிக பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. இது மக்களுக்கு சுகாதார பாதுகாப்பை வழங்குவதில் நிச்சயம் மிக பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்தே இல்லை.

ஏஐ மூலம் ஒவ்வொரு நபருக்கும் என்ன மாதிரியான கேன்சர் பாதிப்பு இருக்கிறது என்பதை கண்டறிந்து அவர்களுக்கு ஏற்ற மாதிரியான mRNA வேக்சினை உருவாக்கும் சூழல் சீக்கிரமே ஏற்படும்..

எப்படி சாத்தியம்: மேலும், பொதுவாக நமது உடலில் கேன்சரின் சிறு பகுதி ரத்தத்தில் எப்போதும் மிதந்து கொண்டு இருக்கும். இதை மட்டும் ஏஐ மூலம் நம்மால் கண்டறிய முடிந்தால் அவ்வளவு தான் ஆட்டமே மாறிவிடும்.. அதன் பிறகு எளிமையாக ஒரு ரத்த பரிசோதனை நடத்தி மரபணு வரிசைமுறையின் உதவியுடன், குறிப்பிட்ட புற்றுநோய்க்கு எதிராக போராட ஒரு தடுப்பூசியை உருவாக்கலாம்.

இதன் மூலம் , ஒவ்வொரு நபருக்கும் என்ன கேன்சர் என்பதை ஆராய்ந்து அவருக்கு ஏற்ப வேக்சினை தயாரிக்க முடியும். இதன் மூலம் வெறும் 48 மணி நேரத்தில் ஏஐ பயன்படுத்தி உங்களால் வேக்சினை தயாரிக்க முடியும். அதாவது ஆரம்பகால புற்றுநோயைக் கண்டறிதல், குறிப்பிட்ட கேன்சருக்கான தடுப்பூசியை உருவாக்கி, செலுத்துவது என அனைத்துமே ஏஐ மூலம் 48 மணி நேரத்தில் செய்து முடிக்க முடியும்” என்றார்.

ஏஐ: ஏஐ துறையில் சர்வதேச அளவில் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்காக டிரம்ப் அரசு அமெரிக்காவில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை மேம்படுத்த 100 பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது. இதற்காக ஓபன் ஏஐ உட்பட உலகின் தலைசிறந்த ஏஐ நிறுவனங்கள் இணைந்து ஸ்டார்கேட் என்ற கூட்டு முயற்சியை ஆர்ம்பித்துள்ளது.

இப்போது 100 பில்லியன் டாலர் முதலீடு செய்யப்படும் நிலையில், இதை அடுத்த 4 ஆண்டுகளில் 500 பில்லியன் டாலராக உயர்த்தவும் அமெரிக்க அரசு திட்டமிட்டுள்ளது..

எம்ஆர்என்ஏ வேக்சின்: இந்த எம்ஆர்என்ஏ வேக்சின் என்பது ஒரு அதிநவீன தொழில்நுட்பமாகும். வழக்கமான வேக்சினுக்கும் இதற்கும் வேறுபாடுகள் உள்ளன. இந்த எம்ஆர்என்ஏ வேக்சினில் மெசஞ்சர் ஆர்என்ஏ மட்டும் இருக்கும்.

இது நமது உடலில் சென்று வைரஸை அழிக்கும் ஒரு குறிப்பிட்ட புரதத்தை உற்பத்தி செய்ய உடலின் செல்களுக்கு அறிவுறுத்தும். அதன்படி கேன்சர் வைரஸ்களை கண்டறிந்து அதை அழிக்கும் மெசேஜ்ஜை நமது உடலுக்கு கொடுக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள். வழக்கமான தடுப்பூசிகளை போலவே இவையும் பாதுகாப்பானவை. மேலும், இதை வழக்கமான தடுப்பூசிகளை விட விரைவாக நாம் உருவாக்கிவிடலாம்.

Previous Story

அரசின் நண்பர்களும் விரோதிகளும்!

Next Story

2025ல் புதுக் கூட்டணிகள்!