மேற்கத்திய  தலிபான் பேச்சு துவக்கம்

ஓஸ்லோ : கடும் நிதி நெருக்கடி, பஞ்சத்தில் உள்ள தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் ஆட்சிப் பொறுப்பை தலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றியதற்கு பின், முதல் முறையாக மேற்கத்திய நாடுகளுடன் பேச்சு துவங்கியுள்ளது.


ஆப்கானிஸ்தானை தலிபான் பயங்கரவாதிகள் கடந்தாண்டு கைப்பற்றினர். இதையடுத்து ஆப்கானிஸ்தானுக்கு இதுவரை அளித்து வந்த உதவிகளை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் நிறுத்தின. ஏற்கனவே போரால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானில் தற்போது கடுமையான நிதி நெருக்கடி நிலவுகிறது. அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்நிலையில் நாட்டின்பொருளாதாரம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உதவும்படி, உலக நாடுகளுக்கு தலிபான் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.இது தொடர்பாக மேற்கத்திய நாடுகளுடனான மூன்று நாள் பேச்சு நேற்று துவங்கியது. இந்த பேச்சில் தலிபான் அமைப்புடன் அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், பிரிட்டன், பிரான்ஸ் இத்தாலி, நார்வே பிரதிநிதிகள் குழு பங்கேற்றனர்.

இலங்கை உட்பட பல நாடுகளில் அமைதி ஏற்படுவதற்கு மத்தியஸ்தம் செய்துள்ள நார்வே, இதற்கான முயற்சிகளை எடுத்துள்ளது. நார்வேயின் ஓஸ்லோ நகரில் இந்த பேச்சு துவங்கியுள்ளது.

பல நாடுகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ள 75 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள ஆப்கானிஸ்தான் சொத்துக்களை விடுவிக்க, தலிபான்கள் வலியுறுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.அதே நேரத்தில் ஆப்கானிஸ்தானில் அனைத்து தரப்பினரும் ஏற்கக் கூடிய அரசு அமைக்க தலிபான்கள் முன்வர, மேற்கத்திய நாடுகள் வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் உரிமை மற்றும் மனித உரிமை ஆர்வலர்களுடன், மேற்கத்திய நாடுகளின் குழு பேச்சு நடத்தியுள்ளது.

Default thumbnail
Previous Story

தென் சீனக்கடல்: அமெரிக்க-சீன மோதல்

Next Story

யாழில் துப்பாக்கிச்சூடு:தலை தெறிக்க ஓடிய நபர்கள்!