நஜீப்
நன்றி 14.12.2025 ஞாயிறு தினக்குரல்
இந்த அரசுக்கு கிடைக்கின்ற நிதியை முகாமைத்துவம் செய்யத் தெரியாது அவர்களுக்கு அனுவம் இல்லை. அதனால் கிடைக்கும் நிதி வீண் விரையாமாகி விடும் என்றும் ரணில் விசுவாசிகள் கலைப்படுவதை பரவலாகப்பார்க்க முடிகின்றது.
உதய கம்மன்பில தான் இந்த நாட்டில் ஜனாதிபதி கதிரையில் இருந்தால் முன்னாள் ஜனாதிபதிகள் அனைவரையும் ஒன்று சேர்த்து அவர்களது ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள ஒரு முகாமைத்துவக் குழுவை அமைப்பேன் என்று சொல்லி இருந்தார்.
ஆளும் தரப்பு அமைச்சர் சமந்த முதலில் அவர்களை ஒரு இடத்தில் ஐந்து நிமிடங்கள் நேராக நின்றுகொடிருக்கும் படி சொல்லுங்கள் அப்போது தெரியும் இவர்களின் முகாமைத்துவ ஆற்றல் என்று இந்தக் கோரிக்கைளை கிண்டலாக நிராகரித்திருந்திருந்தார்.
ஒரு தனித்துவத் தலைவரும் இதே கோரிக்கையை விடுத்திருந்தார். ஒரு எரிச்சலுக்கும் எதிர்பார்ப்புக்களையும் வைத்துக் கொண்டுதான் இவர்கள் இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றார்கள் என நாம் நம்புகின்றோம்.





