நஜீப்
நன்றி: 26.04.2026 ஞாயிறு தினக்குரல்
இன்று உலகில் சட்டம் நீதி பொலிஸ் என்பன செயல்பட்டு வருவதால்தான் இந்தளவுக்கேனும் குற்றங்கள் கட்டுப்படுத்தப்படுகின்றது.
இவற்றை நடாத்துவதற்கு கோடிக் கணக்கில் அரசு பணத்தை செலவு செய்து வருகின்றது. ஆனால் நமது நாட்டில் இருக்கின்ற உதய கம்மன்பில இதெல்லாம் வேஸ்ட்.
புத்தகம் எழுதி மிகக்குறைந்த செலவில் குற்றவாளிகளை அடையாளப் படுத்துகின்ற ஒரு புதிய அறிமுகத்தை இவரே மேற் கொண்டிருக்கின்றார்.
அதன்படி இங்கு நடந்த ஈஸ்டர் தாக்குதல்தாரிகள் தொடர்பான குற்றவாளிகளை அவர் தெளிவுபடுத்தி இருக்கின்றார்.
இதனால் இதன் பின்னர் இது பற்றிய சட்ட நடவடிக்கைகள் எதனையும் மேற் கொள்ள வேண்டியதில்லை என்பது அவர் வாதம். அதே நேரம் இது ஒரு சிறந்த முயற்சி.
உலகத் தரம் வாய்ந்த கண்டுபிடிப்பு என்று சான்றிதழ் கொடுத்திருக்கின்றார் ஞானசாரத் தேரர்.இருவரும் நல்ல சோடிகள். அப்போ நீதி மன்றங்களை மூடிவிட வேண்டியதுதான்.!





