நஜீப்
நன்றி: 26.04.2026 ஞாயிறு தினக்குரல்
1.ஊடக சுதந்திரம் என்பது பொய்களை சந்தைப்படுத்துகின்ற உரிமை கிடையாது. அதன் மூலம் குடிகளை வஞ்சிப்பதும் பாரதூரமான ஒரு குற்றமாக கருத வேண்டும்.
2.ஈஸ்டர் தாக்குதல் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்படுகின்றது. மேலதிக அரச தலைமை வழக்கறிஞர் திலிப பீரிஸ் நீதி மன்றத்தில் முறையீடு.
3.நிலக்கரி விவகாரத்தில் அமைச்சர் ஜயக்கொடி குற்ற பின்னணி பற்றி தனித்துவத்தாரும் பேசுகிறார்கள் நல்ல செய்தி.ஆனால் சிலரது பிறப்பிலே மோசடிதான்.
4.ராஜாக்கள் வங்கிக் கணக்கை நாம் கடந்த வாரம் சொல்லி இருந்தோம். சிரிலால் பிரியந்த நல்லாட்சியிலும் (ஈத்தல பத்திரிகையில்-15.12.2015) இதை எழுதியிருந்தார்.
5.காசுக்கு கணிப்புச் சொல்லிக் கொண்டிருந்தவர்கள் தமிழக வாக்குப்பதிவை கண்டு அதிர்ந்து போய் நிற்கின்றனர். மே-4க்குப் பிறகு இவர்கள் புதுக் கதை விடுவார்கள்.
6.என்பிபி.க்கு நல்ல தலைமை இருக்கின்றது. ஆனால் தலைவருக்கு நல்ல சகாக்கள் அங்கு இல்லை.-முஜிபர். ஐம.சக்தியில். நல்ல சகாக்கள். தலைவர்தான் வேஸ்ட் போலும்.!
7.எமக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருப்பதற்காக அரசை கடுகதியாக செலுத்த தயாராக இல்லை. நிதானமாகவே பயணித்து வருகின்றோம்.-சமந்த வித்தியரத்ன.





