-நஜீப்-
இந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் அரசியல் தலைமைகளின் உண்மையான உருவத்தை மக்கள் கண்டு கொள்ள முடிந்தது. அத்துடன் தமிழ் மக்களின் கணிசமான தொகையினர் தெற்கு அரசியலுடன் இணங்கிப் போகின்ற மன நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதையும் காணமுடிகின்றது.
முன்பு மக்கள் மத்தியில் இருந்த தமிழ்-தமிழன் என்று உணர்வுகள் இப்போது பலயீனப்பட்டு வருதை நமக்கு அவதானிக்க முடிகின்றது.
இதற்கு முக்கிய காரணம் தமிழ் மக்களை வழி நடாத்திச் செல்லக் கூடிய ஒரு அரசியல் தலைமைத்துவம் அங்கு இல்லாமல் இருப்பதும் அரசியல் ஆர்வலர்களும் பொது மக்களில் கணிசமான ஒரு தொகையினரும் நாட்டிலிருந்து வெளியேறியதும் மற்றுமொரு காரணம்.
தமிழர்களின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழரசுக் கட்சி அரசியல் தலைவர்கள் என்று சொல்கின்றவர்கள் இந்த தேர்தலில் நடந்து கொண்டது எந்த வகையிலும் பொருத்தமில்லை.
இது பற்றி பிரிதொரு இடத்திலும் விரிவாக பேசி இருக்கின்றோம். இதனால் பதியதோர் தலைமை தமிழருக்குத் தேவை.
நன்றி: 22.09.2024 தினக்குரல் ஞாயிறு வாரஇதழ்