தப்பியோடுவோரும் அடக்கி வாசிப்போரும்

21ம் திகதி நடக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் முடிவுகளை முன்கூட்டித் தெரிந்திருக்கும் ஊழல் பேர்வளிகள் தற்போது நாட்டில் இருந்து தப்பியோட அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருகின்றனர்

நாட்டில் ஒரு ஆட்சி மாற்றம் நடப்பது உறுதி என்பதனை நம்புகின்ற அரசியல்வாதிகள் 83 பேர் தப்பியோட அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்திருக்கின்றார்கள். தேர்தல் நெருக்கமான இந்த நேரத்தில் இனவாதியான உதய கம்மன்பில் ஏற்கெனவே நாட்டிலிருந்து ஸ்கெப்பாகி இருப்பது தெரிய வருகின்றது.

Sri Lanka Airport opening Jan 21st : 3 key guidelines issued for Airlines - Newswire

அதே போன்று கடவுச் சீட்டு விவகாரத்தில் நடந்த மோசடிகள் பற்றி நீதி மன்றம் விசாரணைக்கு அதன் பணிப்பாளரை அழைத்த போது அவர் நாட்டில் இருந்து தப்பியோடி இருப்பது அப்போது தெரிய வந்தது.

முன்கூட்டித் தலைமறைவாக இருப்பவர்கள் பாதுகாப்புக் கருதி பலர் ஹோட்டல்களில் தங்குவதற்கு அரைகளை ஒதுக்கி வைதிருக்கின்றார்கள் என்றும் தகவல்கள் கூறுகின்றன.

இன்னும் பலர் முடிவுகளைத் தெரிந்து கொண்டு அடக்கி வாசிக்க ஆரம்பித்திருக்கின்றார்கள். ரணிலின் பிரதமர் வேட்பாளர் என்று சொல்லப்பட்ட பிரசன்ன ரணதுங்ஹ பொதுக் கூட்டங்கள் தேவையில்லை பொக்கட் கூட்டங்கள்தான் சிறந்தது என்று அண்மையில் கூறி இருந்தார். ஜனாதிபத் தேர்தலில் இது எப்படிச் சாத்தியம் அவர் ஏன் அப்படிப் பேசுகின்றார்.?

விபரம் அறிந்த பெரும் தொகையினர் இப்போது தேர்தல் பரப்புரைகளில் இருந்து தலைமறைவாகி இருக்கின்றார்கள் அல்லது அடக்கி வாசிக்கின்றார்கள்-பேருக்கு தலையைக் காட்டிக் கொண்டிருக்கின்றார்கள். அல்லது நிதானமான நின்று வேலை பார்ப்பதும் தெரிகின்றது.

Previous Story

முஸ்லிம், யூதர் பின்பற்றும் சுன்னத் சடங்கை கிறிஸ்தவர்கள் கைவிட்டது ஏன்?

Next Story

லெபனானில் ஒரே நேரத்தில் ஆங்காங்கே பல நூறு பேஜர்கள் வெடித்ததில் 2,800 பேர் காயம்!