வெனிசுலாவை அமெரிக்கா
சீண்ட காரணமே இதுதான்!
கடந்த சில நாட்களாக இஸ்ரேல்-காசா பஞ்சாயத்தை விட, வெனிசுலா-அமெரிக்காவின் பிரச்சனைதான் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. வெனிசுலா கடல் பகுதியில் தனது போர் கப்பல்களை நிறுத்த டிரம்ப் உத்தரவிட்டிருக்கிறார்.
இது தேவையற்ற பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கான காரணம் வெனிசுலாவின் கச்சா எண்ணெய் வளங்களை கைப்பற்றுவதுதான் என்று சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
உலக அளவில் கச்சா எண்ணெய் ரொம்பவம் சீப்பாக கிடைக்கும் நாடுகளில வெனிசுலாவும் ஒன்று. சில சமயம் தண்ணீர் பாட்டீல்களை விட ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை மலிவானதாக இருக்கும். அந்த அளவுக்கு வெனிசுலாவில் எண்ணெய் தோண்ட, தோண்ட கிடைத்துக்கொண்டே இருக்கிறது.

அமெரிக்காவின் வளர்ச்சி
இதை பயன்படுத்தி வளர அமெரிக்கா திட்டமிட்டிருக்கிறது. அதாவது உலகம் பூராவும் வரி போட்ட டிரம்ப், ‘அமெரிக்கா பர்ஸ்ட்’ என்கிற கொள்கையை பின்பற்றி, மீண்டும் தனது நாட்டை கெத்தானதாக மாற்றிக்காட்டுவேன் என்று முழங்கியுள்ளார். வளர்ச்சிக்காக பெட்ரோல், டீசல் போன்ற புதைப்படி எரிபொருட்களை மீண்டும் பயன்படுத்துவேன் என்றும் கூறியுள்ளார்.
ஏழரை திட்டம்
எல்லாம் ஓகேதான், பெரிய ஆளா வருகிறவர்கள் எல்லாம், யாரையாவது அடித்துதானே மேலா வருகிறார்கள்! அதுபோல அமெரிக்காவும் எந்த நாட்டை சுரண்டி கொழுப்பது? என்று யோசித்தது. இங்குதான் வெனிசுலா உள்ளே வருகிறது.
அமெரிக்காவின் தொழில் வளர்ச்சிக்கு புதைபடிம எரிபொருள் தேவை. வெனிசுலாவிடம் எக்கச்சக்கமா எரிபொருள் இருக்கிறது. ஆக, அந்நாட்டுடன் ஏழரையை கூட்டி எப்படியாவது அதை கைப்பற்றி விடலாம் என்று டிரம்ப் திட்டமிட்டிருக்கிறார்.
டிரம்பின் பிளான்
என்னங்க சொல்றீங்க? இதெல்லாம் உண்மையா? என்று கேள்வி எழலாம். ஆம் உண்மைதான். இதற்கு ஆதாரமும் இருக்கிறது. “ஈராக் போரில், போர் ஒரு பிரச்சனை இல்லை. மாறாக ஈராக்கின் எண்ணெயைக் கைப்பற்றத் தவறியதுதான் உண்மையான பிரச்சனை.
ஈராக்கின் எண்ணெய் வளத்தை எடுத்துக் கொண்டிருந்தால், நான் அங்கே ஒரு ‘டிரம்ப் ஹோட்டலை’ கட்டியிருக்கும் வாய்ப்பு அதிகம்” என்று டிரம்ப் கூறியிருந்தது நினைவிருக்கிறதா? இதுதான் அந்த ஆதாரம். எனவே வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை சுரண்ட, அமெரிக்க கடற்படையை வெனிசுலாவுக்கு அருகில் குவிந்திருக்கிறார் டிரம்ப்.
தற்போதைய வெனிசுலா சூழல்
இந்தியாவின் காஷ்மீர் பகுதியை பாகிஸ்தான் உரிமை கோருவதை போல, வெனிசுலாவின் எஸ்செகிபோ பிராந்தியத்துக்காக பக்கத்து நாடான கயானா சண்டை போட்டு வருகிறது. சமீபத்தில் அமைதிக்க நோபல் பரிசு வாங்கிய, வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ, வெனிசுலாவின் அதிபரானால் இந்த பிராந்தியத்தை கயானாவுக்கு விட்டு கொடுத்துவிடுவார்.
இங்குதான் ஒரு மேட்டரை கவனிக்க வேண்டும். எஸ்செகிபோ பிராந்தியத்திற்கு பக்கத்தில் உள்ள கடல் பகுதியில் அமெரிக்காவின் ‘எக்ஸான்மொபில்’ எனும் நிறுவனம் கச்சா எண்ணெய் வளம் இருப்பதை கண்டுபிடித்திருக்கிறது. ஆக கூட்டி கழித்து பார்த்தால், கணக்கு சரியாக வருகிறது. அதாவது, வெனிசுலாவில் கிளர்ச்சியை ஏற்படுத்தி ஆட்சியை கவிழ்த்து, மரியா கொரினா மச்சாடோவை அதிபராக்கி, அதன் மூலம் எஸ்செகிபோ பிராந்தியத்தை கைப்பற்றுவதே அமெரிக்காவின் திட்டமாக இருக்கிறது.
இதற்காகத்தான் தற்போது அமெரிக்காவுக்கும் வெனிசுலாவுக்கும் இடையே பஞ்சாயத்துகள் அதிகரித்திருக்கின்றன.
கடந்த 1998-ல் ஹியூகோ சாவேஸ் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, அமெரிக்கா வெனிசுலாவின் போலீவரியன் புரட்சியை கவிழ்க்க தொடர்ந்து முயன்றுள்ளது. இராணுவப் படையெடுப்பைத் தவிர, இராணுவக் கிளர்ச்சி, மாற்று அதிபரை நியமித்தல், உலகளாவிய நிதி அமைப்பை அணுகுவதைத் தடுத்தல், பொருளாதாரத் தடைகள், மின்சார விநியோகத்தைச் சீர்குலைத்தல், கூலிப்படையினரை அனுப்புதல், தலைவர்களைக் கொல்ல முயற்சிப்பது எனப் பல வழிகளைக் கையாண்டுள்ளது.
இது எதுவும் கைகொடுக்காத நிலையில், தற்போது மேலே சொன்ன பிளானை எக்ஸிக்யூட் செய்ய அமெரிக்கா களத்தில் இறங்கியுள்ளது.






